ஹாங்காங் : ஹாங்காங்கில் வாழும் ஏராளமான பேட்மிண்டன் ரசிகர்களுக்கு இந்திய பேட்மிண்டன் வீரர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு இந்தியா கிளப் அமைப்பினரால் நவம்பர் 25ம் தேதி வழங்கப்பட்டது. ஜோர்டானில் உள்ள இந்தியா கிளப் அரங்கில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, மீண்டும் ஹாங்காங் வந்து அடுத்த ஆண்டும் தனது திறமைகளை வெளிக்காட்ட விரும்புவதாகவும் தனக்கு இத்தகையதொரு வாய்ப்பு அளித்ததற்காக கோபிசந்த் அகாடமிக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். உலகின் முதல்நிலை வீரரான லீ சோங்குடன் விளையாடிய அஜய் ஜெயராம் தோல்வியை தழுவினார். பின்னர் பேட்டி அளித்த அவர், ஹாங்காங்கில் மிக சிறப்பாக விளையாடியதாக தான் உணர்வதாகவும், இருப்பினும் வெற்றி பெற இயலவில்லை எனவும், அடுத்த ஆண்டும் மேலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற உள்ளதாக தெரிவித்தார். கோபிசந்த் வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் அவர்களுடன் இணைந்து விளையாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். பின்னர் பேட்மிண்டன் வீரர்களும் இணைந்து விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...
தற்போதைய செய்தி
தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கான, 586 ஏக்கர் நிலம், கையகப்படுத்தும்பணி, இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படுமென, கலெக்டர் ஆஷிஷ்குமார் ...
மே 20,2013 IST