கிறிஸ்தவ தேவாலயத்தில் இயங்கி வரும் லண்டன் கணபதி ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கிறிஸ்தவ தேவாலயத்தில் இயங்கி வரும் லண்டன் கணபதி ஆலயம்

ஜூன் 19,2008  IST

Comments

தலவரலாறு : லண்டனில் உள்ள விம்பிள்டன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு கணபதி ஆலயமாகும். 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எபர்டு ரோட்டில் அமைந்திருந்த தேவாலயம் ஒன்று பெறப்பட்டு, அதன் முக்கிய அறை அருள்மிகு சத்ய சாய்பாபாவின் கோயிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று இக்கோயிலில் சத்ய சாய் பாபா வழிபாடு துவங்கப்பட்டது. 1981-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இக்கோயிலில் கணபதி வழிபாடும் துவங்கப்பட்டது. ஐரோப்பாவின் முதல் இந்துக் கோயிலாக கருதப்படும் இந்த கணபதி ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் முற்றிலும் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோயிலில் முழுவதும் இந்து முறைப்படியில் திருவிழாக்கள், பண்டிகைகள், பூஜைகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. மேலும் இக்கோயிலில் கலாச்சார நிகழ்வுகள், கருத்தரங்குகள், தியான வகுப்புக்கள் போன்றனவும் நடத்தப்பட்டு வருகின்றன.கணபதி கோயில் நிர்வாகிகள் மற்றும் சத்ய சாய்பாபா கோயில் நிர்வாகிகள் இணைந்து ஆண்டுதோறும் பல சமூக சேவைகளும் புரிந்து வருகின்றனர்.1979-ம் ஆண்டு விம்பிள்டன் பகுதியில் வாழ்ந்த சைவ குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை வாசிகள் தனிப்பட்ட கணபதி சிலை ஒன்றை நிறுவி வெள்ளிக்கிழமை தோறும் பூஜைகள் நடத்தி வந்தனர். 1980-ம் ஆண்டு இந்துக்கள் வழிபடுவதற்கென தனி இடம் வேண்டிய இவர்கள் அந்த தேவாலயத்தை விலைக்கு வாங்கி 1981-ம் ஆண்டு இக்கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால் இக்கோயிலில் சில சட்டப்பிரச்சனைகள் ஏற்பட்டு, பின் வழக்கு இந்துக்களுக்கு சாதகமாக முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் குழந்தைகளுக்கான கலாச்சார போதனை வகுப்புக்களும் தியான வகுப்புக்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டு பூஜைகளும் அர்ச்சனைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காக காலை 8 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கிறது. இக்கோயிலில் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கலாச்சார இசை மற்றும் நடன வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்லோக வகுப்புக்களும் , பஞ்சாங்க கதைகளும் கற்றுத்தரப்படுகின்றன. இக்கோயிலின் வளர்ச்சி பணிகள் மற்றும் பாரம்பரிய முறையிலான சிற்பங்களை வடிவமைக்க தென்னிந்திய கட்டிடக் கலைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆகம விதிகளுக்கும் இந்திய தத்தவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இக்கோயில் முற்றிலுமாக இந்துக்களின் முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது.

கோயில் நேரங்கள்: சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கோயில் திறக்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் காலை 10 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய நேரங்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோயில் முகவரி:

Shree Ghanapathy Temple
125-133, Effra Road,
Wimbledon,
London SW19 8PU
       

தொலைப்பேசி : 020 8542 4141Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி...

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா...

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா...

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு...

Advertisement
Advertisement

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள காவல் மையத்தை அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா பார்வையிட ...

ஜூன் 22,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)