தென் மத்தியத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்வு

டிசம்பர் 17,2012  IST

Comments

மெம்ஃபிசு : அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த மெம்ஃபிசு பெருநகரத்தில் செயல்பட்டு வருகிறது, தென் மத்தியத் தமிழ்ச்சங்கம். மெம்ஃபிசு நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள சிறுநகரங்களில் உள்ள பெடெக்ஸ், ஹில்ட்டன் குரூப், செயிண்ட் ஜூடு மருத்துவமனை, அக்ரீடோ, மெம்ஃபிசு பல்கலைக்கழகம் முதலான நிறுவனங்களில் கணிசமான தமிழர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திக் கொண்டுவரும் தென் மத்தியத் தமிழ்ச்சங்கத்தின் 2012-2013ம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 15ம் தேதி, ஜெர்மன் டவுன் நூலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது நடைபெற்ற 2013 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளுக்கான தேர்தலில் புதிய உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் விபரம் : தலைவர் - இளங்கோவன் ராஜமோகன், துணைத் தலைவர் - கங்கா கெளரி சரவணகுமார், செயலாளர்-அர்ச்சனா வாசுதேவன், பொருளாளர்- கெளசல்யா முரளி, கலை இலக்கிய பண்பாட்டுச் செயலாளர் - அரவிந்த் இராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்- துரைக்கண்ணன்.
கூட்டமுடிவில், 2012 ம் ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டும், புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தினை சங்கத்தின் நிறுவனத் தலைவர்களான கல்யாண் சிதம்பரம், கண்ணன் இராமசாமி, தமிழ்ப்பள்ளியின் முதல்வர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.
சங்க இணையதள முகவரி : http://www.midsouthtamilsangam.org
- தினமலர் வாசகர் பழமைபேசி

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கட்டைப்பிராய் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், இலங்கை

கட்டைப்பிராய் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், இலங்கை...

ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த உதாரா ஆலயம், போர்ச்சுகல்

ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த உதாரா ஆலயம், போர்ச்சுகல்...

ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம், தென்னாப்பிரிக்கா

ஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம், தென்னாப்பிரிக்கா...

ஸ்ரீ வரலக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், போலந்து

ஸ்ரீ வரலக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், போலந்து...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us