ஜனவரி 15,2013 IST
ஆலய வரலாறு : கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் என்னும் அற்புத ஆலயம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சாய்பாபா ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த 4 மாதங்களுக்குள் இக்கோயில் கட்டும் பணிகள் நடைபெற துவங்கியது. தெற்கு கலிபோர்னியாவின் முதல் சாய்பாபா ஆலயம் என்ற அழைக்கப்படும் இக்கோயில் 4 மாதங்களுக்கும் கட்டி முடிக்கப்பட்டது மிகப் பெரிய அற்புத நிகழ்வாகும். இவ்வாலயம் 2007ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதியன்று திறக்கப்பட்டது. இக்கோயிலின் திறப்பு விழா தினத்தன்று ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து வழிபாடு நடத்தினர். சாய் பக்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரின் திரளான காணிக்கைகள், சாய்பாபாவின் பரிபூரண அருள் ஆகியவற்றாலேயே மிகக் குறுகிய காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக திரளாக வந்து வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக இக்கோயில் அடுத்தடுத்த வளர்ச்சிகளை கண்டது. சாய் பக்தர்களின் சீரிய முயற்சியால் உருவான இவ்வாலயத்திற்கு பக்தர்கள் பொருளாதார ரீதியாக அளித்து வரும் ஒத்துழைப்பு அளப்பறியது. சாய்பாபாவின் அற்புதங்களையும், ஆன்மிக அனுபவங்களையும் கண்முன்னே கண்டு உணர்ந்த பக்தர்கள் இக்கோயிலுக்கு அளித்து வரும் ஆதரவு மிகப் பெரியதாகும்.
ஆலய நேரம் : வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்துள்ளது. வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்துள்ளது. வார இறுதி நாட்களில் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Shri Shirdi Saibaba Sansthan
144 S, 4th Street, Montebello
Dist. Los Angeles, California
தொலைப்பேசி : 323-721-1772
இணையதளம் : http://www.shirdisaila.org/shirdisaila/index.html
புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். டில்லியில் உள்ள அத்வானியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ...
ஜூன் 18,2013 IST