எத்தியோப்பியாவில் பொங்கல் விழா

ஜனவரி 22,2013  IST

Comments

அடிஸ் அபாபா: கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள இந்தியன் நேஷனல் பள்ளியில் ஜனவரி 20ம் தேதி அன்று காலை 11.45 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை எத்தியோப்பிய தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆம்போ யூனிவர்சிட்டியில் பணிபுரியும் பேராசிரியர் நடராஜன் தலைமை தாங்க, இந்தியன் எம்ஸியின் உயர் அதிகாரியான சீனிவாசன் முன்னிலை வகிக்க, இந்தியன் எம்பஸியின் உயர் அதிகாரி உட்பால் சிப்பு விருந்தினராக வந்து விழாவை சிறப்பித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் தலைவர் காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து நடராஜன், பொங்கல் விழா கொண்டாடுவதன் மகத்துவத்தை பற்றி விளக்கி சொற்பொழிவு ஆற்றினார். சுபாஷ்,சுப்பிரமணியன் இன்னிசை குழுவினரின் இன்னிசை கச்சேரி வந்திருந்த சங்க உறுப்பினர்களின் செவிக்கு விருந்தாக அமைந்தது. சங்க உறுப்பினர்களுக்கு சர்க்கரை பொங்கலுடன் மதிய உணவு அளிக்கப்பட்டது. சீனிவாசன், வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் பரிசு வழங்கி மகிழ்வித்தார் சங்க புதிய பொறுப்பாளர்களை தேர்வு குழு அறிவித்தது. சங்க புதிய தலைவர் ரமேஷ் பாபு நன்றிஉரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
- தினமலர் வாசகர் வீரா

மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்...

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்...

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

Advertisement
Advertisement

கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம்

மும்பை: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் இன்று மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ...

மே 25,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us