மான்ஸா : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்ஸானியாவில் உள்ள மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சங்கத்தலைவர் எஸ். முஹம்மது ஹோஷ்மின் தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. ரிச்சர்ட், சாந்தி தம்பதியினர் தோரன நுழைவாயிலில் நின்று தமிழக கலாச்சார மரபுப்படி சந்தனம் கொடுத்து, பன்னீர் தெளித்து அனைவரையும் வரவேற்றனர். குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. விழாவில், குழந்தைகளின் கிராமிய நடனம், பரதநாட்டியம், பொங்கல் பாடல்கள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. “”தமிழர் திருநாளின் தனிச்சிறப்பு” என்ற தலைப்பில் நித்தியஸ்ரீ சுந்தர் பேசினார். மழலைகளின் மாறுவேட நிகழ்ச்சி மனதை ஈர்த்தது. முன்னதாக கொக்கோகோலா நிறுவனத்தின் நிதி மேளாளர் கே. எஸ். வெங்கட் அனைவரையும் வரவேற்றார். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தமிழகத்து பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. ஜெயராஜ், பிரகாஷ் ராஜா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். சுந்தர் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை ஜலாலுதீன், முத்து, மணிகண்டன், ஷெரீன் லியாகத் ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக, சர்க்கரைப் பொங்கல், இட்லி உள்ளிட்ட பல்வகை தென்இந்திய சைவ பதார்தங்கள் வழங்கப்பட்டதை மான்ஸா வாழ் இந்தியர்கள் அனைவரும் விரும்பி உண்டு தமிழ்ச் சங்கதினரின் விருந்தோம்பல் பண்பினைப் பாராட்டினர். விழாவில், மான்ஸாவாழ் இந்தியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- தினமலர் வாசகர் எஸ்.லியாகத்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...
தற்போதைய செய்திசென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மல்லிகா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விஐய்கர் என்ற நபர் , கையில் துப்பாக்கியுடன் மிரட்டி வருகிறார். தற்போது குடியிருப்பு ...
மே 22,2013 IST