தாரஸ்ஸலாம் : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்ஸானியாவில் உள்ள தாரஸ்ஸலாம் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா புத்தாண்டில் பொறுப் பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகளின் கூட்டுமுயற்சியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா நடந்த லோஹனா அரங்கம் முழுவதும் ஆப்ரிக்க கரும்பு, கண்கவர் தமிழ் டிஜிட்டல் வண்ணத் தோரனங்கள், மாஇலை மற்றும் வாழை மரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. புதிய சங்கத்தலைவர் பழனிச்சாமி தமிழர் திருநாளின் தனிச்சிறப்புகளை எடுத்துரைத்தார். விழாவில் குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகளிர் நடனத்தையும் ரிஸ்வான், ரோஸ் நாதன் பாடலையும் கூட்டத்தினர் வெகுவாய் கைதட்டி ரசித்தனர். ராஜூ குழுவினரின் குள்ள மனிதர்கள் ஆட்டம், வித்தியாசமாய் முற்றிலும் புதுமையாய் இருந்தது. தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தமிழகத்து பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.நிம்மி வெங்கடேஷ், சடகோபன் ஆகியோர் நிகழ்ச்சிகளை சுவையாய் தமிழ் மணம் கமழ தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாட்டினை புதிய நிர்வாகிகள் சிறப்பாய் செய்து இருந்தனர். நிறைவாக, சர்க்கரைப் பொங்கல், வடை உள்ளிட்ட பல்வகை தென்இந்திய சைவ பதார்த்தங்கள் வழங்கப்பட்டதை தாரஸ்ஸலாம் வாழ் தமிழர்கள் அனைவரும் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். இருண்ட கண்டத்தில் இருந்தாலும் தமிழ்மண்ணின் குணமும், மரபின் செழுமையும் மாறாமல், மறக்காமல் ஆண்டுதோறும் பொங்கல் விழாவினை தாரஸ்ஸலாம் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சிறப்பாய் கொண்டாடி வருவதை தமிழர்கள் அனைவரும் பாராட்டினர்.
- தினமலர் வாசகர் செல்வராஜ்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
தமிழக கூட்டுறவு துறையில் துணைப்பதிவாளர், ஆறு பேரை இடமாற்றம் செய்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடம் அடைப்பு குறிக்குள் உள்ளது. அதன் ...
மே 26,2013 IST