ஜூன் 24,2008 IST
தலவரலாறு : மலேசியாவின் நெகிரி செம்பிலான் பகுதியில் அமைந்துள்ள நவீனமயமான அழகிய ஆலயம், அருள்மிகு பால தண்டாயுதபாணி கோயிலாகும்.1998-ம் ஆண்டு புதிய கோயில் கட்ட வேண்டும் என்ற பக்தர்களின் எண்ணம் செயல் வடிவமானது. இருப்பினும் சில காலங்களிலேயே கோயிலின் மேற்கூரைகள் மிகவும் பழுதடைய துவங்கியது. அதனால் புதிய கோயில் கட்டுவது அவசியம் என கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்து அப்பகுதி இந்துக்களின் ஆதரவுடன் 1999-ம் ஆண்டு புதிய கோயில் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டது. 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கான நிலம் பெறப்பட்டு, அவ்வாண்டு அக்டோபர் மாதம் இக்கோயிலுக்கான கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்தில் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மே மாதம் சிரம்பான் நகரின் பழைய கட்டிடங்களில் ஒன்றான பழைய (1895-ல் கட்டப்பட்ட) கோயில் இடிக்கப்பட்டு புதிய கோயிலுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 32 சிற்பிகள் வரவழைக்கப்பட்டு கோயிலுக்கான சிற்ப வேலைகளும் துவங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு இக்கோயிலுக்கான கட்டிடப் பணிகள் நிறைவு பெற்றன. சிற்ப வடிவமைப்பு, அச்சு வார்த்தல், மின்சாரம் போன்ற முக்கிய வேலைகள் அந்தந்த துறை சார்ந்த பணியாளர்களிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. 2002-ம் ஆண்டு கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா அன்று லட்சதீப விழா துவங்கப்பட்டது. இதில் 926 நெய் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இவ்விழாவின் மூலம் பெறப்பட்ட அமோக நிதி உதவியைக் கொண்டு கோயிலின் தரைப்பகுதி கிரானைட் கல்லால் அமைக்கப்பட்டது. சிறிது காலத்தில் கோயில் வளாகத்தில் தெய்வ சன்னதிகள் அமைக்கப்பட்டன. 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலின் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்புதிய கோயில் மற்றும் மண்டபத்தின் கும்பாபிஷேக விழா 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது.
முக்கிய விழாக்கள்: தைப்பூசம், சித்ரா பவுர்ணமி, 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக விழா மற்றும் கந்த சஷ்டி விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோயில் நேரங்கள்: காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கிறது. காலை 7 மணிக்கு காலை பூஜையும், மாலை 7 மணிக்கு மாலை பூஜையும் நாள்தோறும் செய்யப்படுகிறது.
கோயில் முகவரி :
Sri Balathandayuthapani Temple,
139A, Jln Dato Bandar Tunggal,
70000 Seremban,
Negeri Sembilan Darul Khusus, Malaysia
தொலைப்பேசி : 06-7638011
தகவல் தொடர்பு :
President: R. Thangaratnam - 012-2311007
Assistant Secretary: Thiru S. Mutthiah PJK- 012-6211849
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான பூரி ஜெகந்தார் கோவில் சார்பில் எப் எம் ரேடியோ சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி ரூபாய் ...
ஜூன் 20,2013 IST