ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழக புதிய நிர்வாகிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழக புதிய நிர்வாகிகள்

ஜூன் 09,2016  IST

Comments

 ஹாங்காங் வாழ் தமிழர்களால் தீர்மானிக்கப்பட்டு 1967ல் தொழிலதிபர் பி.எஸ்.அப்துல் ரகுமானின் முன் முயற்சியில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 13.10.1967 அன்று பதிவு செய்யப்பட்டு உருவானது. தற்பொழுது ஹாங்காங் வாழ் தமிழர்களால் அன்புடன் தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் முகமது யூனுஸ் ஐயா தலைவராகவும், ஹமீது ஜலால் செயலாளராகவும், அப்துல் சுக்கூர் பொருளாளராகவும் அப்போது நியமிக்கப்பட்டனர். முதல் பொதுக்குழுக் கூட்டம் 1968-ல் கூடியது. துவக்க காலங்களில் திரைப்படங்களை வரவழைத்து திரையிடுவது மட்டுமே கழகத்தின் பணியாக இருந்து வந்தது. பின்னர் படிப்படியாக பிரபலமான பிரமுகர்களைக் கௌரவிப்பதும், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதும், விளையாட்டுப் போட்டிகள், மேடை நாடகங்கள், குறும்படங்கள், சிறுவர் விழா என விரிவடைந்து, தற்சமயம் மகளிருக்கான பிரத்யேக நிகழ்ச்சிகள் என்பது வரை விரிவடைந்துள்ளது.

தமிழ் பண்பாட்டு கழக உறுப்பினர்கள் (2016-2017):
தலைவர்: முஜிபுர் ரஹ்மான்; முதல் துணை தலைவர்: ஜமால்; இரண்டாம் துணை தலைவர்: சஃபியுர் ரஹ்மான்; செயலாளர்: குமரன்; துணை செயலாளர்: கலை அருண்; பொருளாளர்: செந்தில்; செயற்குழு உறுப்பினர்கள்: சுகந்தி, சித்ரா சிவக்குமார், இஸ்மாயில், இம்ரான், ஷ்யாம் நாராயணன், ராம், முன்னாள் தலைவர் திருப்பதி நாச்சியப்பன்
– நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்


Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் கவிமாலை

சிங்கப்பூரில் கவிமாலை...

அமெரிக்காவில் இருமொழிக் கொள்கையில் தமிழுக்கு அங்கீகாரம்

அமெரிக்காவில் இருமொழிக் கொள்கையில் தமிழுக்கு அங்கீகாரம்...

ஜாம்பியாவில் தென்னிந்திய உணவுத் திருவிழா

ஜாம்பியாவில் தென்னிந்திய உணவுத் திருவிழா...

அபுதாபியில் பாரதி நட்புக்காக நடத்திய "இஃப்தார்" விழா

அபுதாபியில் பாரதி நட்புக்காக நடத்திய "இஃப்தார்" விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2016 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us