ஆலய வரலாறு : மலேசியாவின் பெனாங் நகரில் அயர் இட்டம் நதிக்கு அருகே அமைந்துள்ள அழகிய இந்து ஆலயம் ஸ்ரீ சிவசக்தி ஆலயம் ஆகும். இந்த நதியின் வலது புறம் இக்கோயில் அமைந்துள்ளது. சுங்கை ஏர் டெர்ஜன் நீ்ர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள மிகச் சில இந்துக் கோயில்களில் இதுவும் ஒன்று.
கம்பன்ங் லங்வாய் என்ற சிறிய கிராமத்தில் இந்துக்களின் கிராம கோயிலாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கிராமத்தில் மலாய், இந்திய மற்றும் சீனர்கள் ஆகியோர் கூட்டாக வாழ்ந்து வருகின்றனர். 1930ம் ஆண்டு சிறிய ஆலயமாக கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பிறகு சில முறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. வெங்காய வடிவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான மசூதியின் உச்சியை போன்று அமைந்துள்ள இக்கோயிலின் விமானம், இந்துக்களின் முறைப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது இக்கோயிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. 2009ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முழுவடிவம் பெற்ற இக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆலய முகவரி : Sri Sivasakthi Temple
99-K Jalan Air Itam, 10460 Penang
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
புதுடில்லி: இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் என்று சீனப்பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ...
மே 20,2013 IST