ஆலய வரலாறு : தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். இக்கோயில் உள்ளூர்வாசிகளால் வட்ஹக்(உமா தேவி ஆலயம்) என அழைக்கின்றனர். இக்கோயில் சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பாங்காக்கில் உள்ள மற்ற இந்துக் கோயில்களைப் போன்று சாதாரணமாக இருந்த இக்கோயி்லில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தெய்வங்களின் சன்னதிகள் மற்றும் தினமும் நடைபெறும் 6 கால பூஜை உள்ளிட்ட காரணங்களால் இக்கோயில் மிகவும் புகழ்பெற துவங்கியது. இக்கோயிலில் அனைத்து இந்து திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிற தெய்வங்கள் : இக்கோயிலின் முக்கிய தெய்வமாக மகா மாரியம்மன் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் பிரகாரத்தில் பார்வதி, துர்க்கை, காளி, கணேசர், கந்தகுமரன், கிருஷ்ணன், விஷ்ணு, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி ஒரு சிறிய சிவலிங்கமும், தனியே நவக்கிரக சன்னதியும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம் : இக்கோயிலின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களும், அதற்கு பூசப்பட்டுள்ள வண்ணங்களும் காண்போரை கவரும் விதமாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் தென்னிந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. ஆலயத்திற்குள் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்படுவதில்லை என்றாலும், ஆலயத்தில் மூலவராக மகா மாரியம்மனின் படமும் விற்பனை செய்யப்படுவதில்லை. இது பாங்காங்கில் வாழும் இந்தியர்கள் மற்றும் தாய்லாந்து நாட்டினர் மகா மாரியம்மன் மீது கொண்ட தீவிர பக்தியை பறைசாற்றுகிறது.
ஆலய நேரம் : தினசரி 6 கால பூஜை இக்கோயிலில் தவறாது நடத்தப்பட்டு வருகிறது. சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Sri MahaMariAmman Temple,
No. 2, Thanon Pan, Silom Bangkok Thailand.
Bangkok - 10120, Thailand.
தொலைப்பேசி : 022384007
மொபைல் : 0852172898
மின்னஞ்சல் : siridhornkul.p@hotmail.com
இணையதளம் : http://srimahamariammantemplebangkok.com/
மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழ் மாத-தமிழர் திருநாள்!...
ஏப்ரல் 21,2018 IST