ஆலய குறிப்பு : பக்தி மார்க்கத்தையும், அதன் வாயிலாக வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்ற கோட்பாட்டையும் உணர்த்துவதற்காக லண்டனின் நியூகேஸ்டெல் பகுதியில் உருவாக்கப்பட்டது இந்த இந்து ஆலயம். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 முதல் 5 மாணவர்களை கொண்ட குழுவாக இவ்வாலயம் தனது சமூக பணியை துவங்கியது. தற்போது இந்த ஆன்மிக பணியில் ஏராளமான மாணவர்கள் பங்கெடுத்து வருகின்றனர். இவ்வாலயத்தில் அனைத்து இந்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நியூகேஸ்டெல் இந்து ஆலயத்தில் கிருஷ்ணர், ராதை, விநாயகர், துர்க்கா தேவி, பார்வதி சமேத சிவ பெருமான், ராம பரிவாரங்கள், சிவலிங்கம், ஷீரடி சாய்பாபா உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
ஆலய நேரம் : திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் காலை 11 மணி முதல் பகல் 3 வரை திறந்து வைக்கப்படுகிறது. 2வது ஞாயிற்றுகிழமைகளில் காலை 8.30 மணி முதல் பகல் 3 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.
ஆலய முகவரி : HINDU TEMPLE
172,WEST ROAD
NEWCASTLE UPON TYNE
NE4 9QB
தொலைப்பேசி : 0191273 3364
இணையதளம் : http://www.hindutemple.co.uk/
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் இன்று (19-05-13) அதிகாலை 05.30 மணி நிலவரப்படி 24 காரட், ஒரு கிராம் தங்கம் ரூ.2,400 ரூபாய் 34 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.2,200 ரூபாய் 11 ...
மே 19,2013 IST