இந்து ஆலயம், ஸ்லோக், பிரிட்டன்

பிப்ரவரி 19,2013  IST

Comments

ஆலய வரலாறு : பிரிட்டனின் ஸ்லோக் பகுதியில் இந்து ஆலயம் அமைக்கும் எண்ணம் 1963 ம் ஆண்டு உதயமானது. இருப்பினும் சுமார் 18 ஆண்டுகள் கழித்தே இவ்வாலயத்தின் கட்டுமான பணிகள் சால்வி பகுதியில் துவங்கப்பட்டது. ஸ்லோக் இந்து கலாச்சார அமைப்பின் சார்பில் இக்கோயில் கட்டப்பட்டது. பிரிட்டனில் வழிபட்டு நோக்கத்துடன் அமைக்கப்பட்ட முதல் இந்து கோயில் இதுவே ஆகும். அதற்கு முன் சமூக மன்ற அரங்கிலேயே கூட்டங்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வந்தது. நன்கொடை மூலம் வசூலான 75,000 யூரோ பொருட்செலவில் 7 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இந்து கட்டிடகலைக்கு மிகச் சிறந்த சான்றாக இக்கோயில் விளங்குகிறது.
1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கோயிலுக்கான விரிவாக்கப் பணிகள் துவங்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்ட இக்கோயிலில் சமூக நிகழ்வுகள், இந்தி வகுப்புக்கள், யோகா மற்றும் இசை நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டது. 1985ம் ஆண்டு தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. 2001ம் ஆண்டு இக்கோயில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டது.

ஆலய நேரம் : காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Slough Hindu Temple UK
Hindu Cultural Society
Registered Charity No. 268146
Keel Drive, Slough, SL1 2XU
தொலைப்பேசி : 01753 790 135

இணையதளம் :
http://www.hindutempleslough.com/HomePage.aspx

மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ரிச்மண்டில் 4 நாள் நடைபெற்ற பாகவத சத்சங்கம்

ரிச்மண்டில் 4 நாள் நடைபெற்ற பாகவத சத்சங்கம்...

இலங்கையில் சிறுவர்தினம்

இலங்கையில் சிறுவர்தினம்...

இங்கிலாந்தில் தீபாவளி விழா

இங்கிலாந்தில் தீபாவளி விழா ...

சிங்கப்பூரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

சிங்கப்பூரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்...

Advertisement
Advertisement

பால் விலை உயர்வு: தமிழக பா.ஜ., கண்டனம்

சென்னை: தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதற்கு தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் ...

அக்டோபர் 25,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)