ஷார்ஜா : ஷார்ஜாவில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய நகைச்சுவை கலந்துரையாடல் பிப்ரவரி 16ம் தேதி மாலை சீலேண்ட் உணவகத்தில் நடைபெற்றது. தமிழ்த்துளி அமைப்பின் தலைவி ப்ரியா விஜய் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் தமிழ்த்துளி அமைப்பு சிறுவர்கள் தமிழில் பேச வேண்டும் எனும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன் பங்கேற்றார். இயந்திரமயமான வாழ்க்கையில் நமது சிந்தனைகளை நகைச்சுவைத் தன்மையுடன் செயல்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வுடன் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ முடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் தமது இளமைப் பருவத்தில் இருந்து தமது வாழ்வில் நடைபெற்ற நகைச்சுவையினை குறிப்பிட்டார். நிகழ்வில் சங்கர் மஹாதேவன், பாலாஜி பாஸ்கரன், பாவை நியாஸ் அஹமது, விஜய், மாயா தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நகைச்சுவையினை பகிர்ந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்...
தற்போதைய செய்தி
பல்லடம் : திருப்பூர், பல்லடம் அருகே பெண் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையத்தை சேர்ந்த ராணி, இவர் ...
மே 19,2013 IST