கலிபோர்னியாவில் தமிழ் வானொலி ஒலிபரப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கலிபோர்னியாவில் தமிழ் வானொலி ஒலிபரப்பு

பிப்ரவரி 25,2013  IST

Comments

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வளைகுடா பகுதியிலிருந்து உலகில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழ் சிறப்பு இணைய வானொலி நிகழ்ச்சி 'காலை தென்றல்' வாரம் தோறும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை www.DesiZindagi.fm என்ற இணைய ரேடியோ அலைவரிசையில் அரிமா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்குகிறார்கள் . இதில் மங்கள நாதம் , ஆன்மீக விவரங்கள் நிறைந்த பக்தி பாமாலை, குழந்தைகளுக்கான குட்டீஸ் கார்னர்,அரிமாவின் ராக கீதங்கள், நேயர் விருப்பம்,ஓல்ட் இஸ் கோல்ட், நேயர்களுக்கான விளையாட்டு அம்சம் கொண்ட சவாலே சமாளி மற்றும் நேயர்களுக்கு பயன் தரும் வகையில் டிப்ஸ் கார்னர், ஜாப்ஸ் கார்னர் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.குட்டீஸ் கார்னரில் கேட்கப்படும் குழந்தைகளுக்கான அறிவு சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் குழந்தைகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு தக்க விதத்தில் ஊக்குவிக்கபடுகிறார்கள். மேலும் நேயர்களுடன் கருத்து பரிமாற்றம் இடம் பெறுகிறது. இந்நிகழச்சிகள் அனைத்தையும் வீ. ரமேஷ் மற்றும் சாந்தி ரமேஷ் தொகுத்து வழங்குகிறார்கள்.
மேலும் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை "நினைத்தாலே இனிக்கும்" என்ற மற்றுமொரு தமிழ் சிறப்பு இணைய வானொலி நிகழ்ச்சி அரிமா எண்டர்டைன்மெண்ட் என்கின்ற நிறுவனத்தால் வழங்கபடுகிறது. இதில் உன்னதமான தமிழ் இசை தொகுப்பிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பப்படும்.'அரிமாவின் காலை தென்றல்' "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் பிற மாகாணத்தில் வாழும் தமிழர்களும் மற்றும் உலக தமிழர்கள் அனைவரும் www.DesiZindagi.fm மற்றும் www.arimausa.com என்ற இணையதளத்தில் உள்ள லிசன் லைவ் பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை காலை PST டைம் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை கேட்டு மகிழலாம். முந்தைய பதிவு நிகழ்ச்சிகள் அனைத்தையும் அச்சீவ்ஸ் இல் கேட்கலாம். அரிமா எண்டர்டைன்மெண்ட், தமிழ் நெஞ்சங்களின் பாடும் திறனை ஊக்குவிக்கும் வகையில் 'தமிழ் கரோக்கி கிளப்' என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்கள். இந்த அமைப்பு மாதம் தோறும் 'கரோக்கி' பாட்டு நிகழ்ச்சிகளை வளைகுடா பகுதியில் வாழும் தமிழர்களுக்காக நடத்துகிறார்கள்.எனவே இப்பகுதியில் வாழும் பாடும் திறமை உள்ள மற்றும் விருப்பம் உள்ள தமிழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tamilkaraokeclub.com இல் உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
- தினமலர் வாகர் பாஸ்கர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அமெரிக்காவில் தமிழக எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா

அமெரிக்காவில் தமிழக எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா...

தமிழ் செய்தியாளருக்கு அஜ்மான் போலீஸ் பாராட்டு

தமிழ் செய்தியாளருக்கு அஜ்மான் போலீஸ் பாராட்டு...

அஜ்மானில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்

அஜ்மானில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்...

துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் ரத்ததான முகாம்...

Advertisement
Advertisement

இன்று ஆதார் வழக்கு விசாரணை கிடையாது

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் ஆதார் வழக்கு விசாரணை இன்று(ஜூலை 25) நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் ...

ஜூலை 25,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us