துபாய் : துபாய் முத்தமிழ்ச் சங்க கலை விழா பிப்ரவரி 25ம் தேதி துபாய் இந்தியா கிளப் தர்பார் அரங்கத்தில் முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் பி.வாசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “தமிழ் சினிமாவின் இன்றைய நிலை” பற்றி மிக அழகாக பேசி அரங்கத்தின் கரகோஷங்களை பெற்றார். மேலும் இளம்பாரி கருணாகரன் நகைச்சுவை பேச்சால் சபையை கட்டிப்போட்டார். வி.ஆர்.எஸ்.சம்பத், வசந்தபவன் ரவி, முத்தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்கள். ஷப்னம், லக்ஷ்மி ப்ரியா பாடல்களை பாடி சபையில் உள்ளவர்களை மகிழ்வித்தார்கள். விழா ஏற்பாடுகளை ரமணி, பாரதி, ஷா, அனிஷ், அருண், கண்ணன், பாலாஜி, கணேஷ், சிகாமணி ஆகியோர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
- தினமலர் வாசகர் பாலாஜி நரசிம்மன்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்...
தற்போதைய செய்தி
பீகார்: பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பேர் ...
மே 20,2013 IST