துபாயில் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மார்ச் 16,2013  IST

Comments

துபாய் : அமீரக காயிதெமில்லத் பேரவை துபாய் சோனாப்பூர் கிளை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின விழா மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்க கருத்தரங்கம் சோனாப்பூர் பகுதி செயலாளர் ரஹமத்துல்லாஹ் தலைமையில் மார்ச் 14ம் தேதி மாலை சோனாப்பூர் பவர் குரூப் கேம்பில் நடைபெற்றது. விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத் அலி முன்னிலை வகித்தார். நிக்ழச்சியின் துவக்கமாக இம்ரான் கான் இறைமறை வசனங்கள் ஓதினார். இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவை துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப், அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ், துபாய் மண்டலச் செயலாளர் முதுவை.ஹிதாயத், அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத், ஷார்ஜா மண்டலச் செயலாளர் தஞ்சை பாட்ஷா கனி,ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீழை ஹமீது யாசின்,துபாய் தேரா பகுதிக்கு காயிதெமில்லத் பேரவையின் மற்றொரு செயலாளராக அறிவிக்கப்பட்ட நெல்லை ஜிந்தா ஆகியோர் முஸ்லிம் லீகை வலிமைப் படுத்துவதன் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினர்.
தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகள், ஏப்ரல் 2-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இட ஒதுக்கீடு,மது விலக்கு, மற்றும் சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருக்கும் பேரணியில் தாயகத்தில் இருக்கும் நமது சமுதாய மக்களையும் நமது உறவினர்களையும் பங்கெடுக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி,பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் கிழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் ஊடகத் துறைச் செயலாளர் கும்பகோணம் சாதிக்,தேரா பகுதி செயலாளர் வி.களத்தூர் ஷாஹுல் ஹமீத்,உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் சோனாப்பூர் பகுதி சமுதாய இளவகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சோனாப்பூர் ஷஹாபுத்தீன் நன்றி கூறினார். அமீரக காயிதெமில்லத் பேரவை தேரா பகுதி செயலாளராக நெல்லை ஜிந்தா தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அறிவித்துள்ளார்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து...

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ...

Advertisement
Advertisement

ஸ்ரீசாந்த்திற்கு 5 நாள் போலீஸ் காவல்

புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித்சண்டிலா ஆகியோர் ...

மே 21,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us