சிங்கப்பூர் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), மார்ச் 17ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, “சமய நல்லிணக்க குடும்ப தின நிகழ்ச்சி” ஒன்றை, சிங்கப்பூர் கிழக்கு கடற்கரை பூங்காவில் மிகச் சிறப்பாக நடத்தியது. ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தி ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், தொடக்க நிலை மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி, பலூன் ஊதும் போட்டி, பெற்றோர்களுக்கான மிதிவண்டி போட்டி, வினா விடை அங்கம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. மதிய உணவும், தேநீர் விருந்தும், அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் வழங்கப்பட்டன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்குடும்பதின நிகழ்ச்சியில், சுமார் 200 பேர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில், தி ப்ரோபசனல் கூரியர் சிங்கப்பூர் கிளையின் மூத்த நிர்வாகி ராஜன் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
- தினமலர் வாசகர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
விருத்தாச்சலம் :விழுப்புரத்தில் இருந்து திண்டுகல் வழியாக 273 கிலோ மீட்டர் வரை இரண்டு வழி ரயில் பாதை அமையவுள்ளது. அதில் அரியலூர், மாத்தூரில் இருந்து ஈச்சங்காடு வரை ...
மே 24,2013 IST