இந்துக் கோயில், மின்னசொட்டா

மார்ச் 18,2013  IST

Comments

ஆலய வரலாறு : மின்னசொட்டா பகுதியில் வழிபாட்டிற்காக இந்து ஆலயம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வாழ்ந்தவர்களின் நீண்ட நாள் எண்ணமாக இருந்து வந்தது. 1970 களில் மின்னசொட்டா வாழ் இந்து குடும்பங்கள் வழிபாட்டின் மூலம் தங்களை ஒன்றிணைத்து கொள்ளவும், குழந்தைகளுக்கு மதம் மற்றும் கலாச்சாரத்தை தற்று தரும் இடம் தேவை முடிவு செய்து இவ்வாலயத்தை அமைத்தனர். 1979ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இக்கோயிலை அமைத்தனர். இக்கோயிலில் ஸ்ரீ ராம பரிவார், ஸ்ரீ கணேசர், ஸ்ரீ கிருஷ்ணர், சரஸ்வரதி, லட்சுமி, மகாதேவர் உள்ளிட்ட திருவுருவப் படங்கள் நிறுவப்பட்டு இக்கோயில் திறப்பு விழா கண்டது. அவ்வாண்டு இறுதியில் பகவத் கீதை வகுப்புக்கள் துவங்கப்பட்டது. 1983ம் ஆண்டு முதன் முதலில் கணேசர் சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய ஆலயமாக துவங்கப்பட்ட இவ்வாலயம் மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டு, தீபாவளி, ஹோலி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது. 1999ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. 2001ம் ஆண்டு விஷ்ணுவிற்கு சுதர்சன ஹோமமும், 2002ல் சீதா ராமர் கல்யாணமும், 2003 ல் கிருஷ்ண மகோற்சவமும் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 2006ம் ஆண்டு ஜூலை 2ம் தேதியன்று இவ்வாலயத்தின் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் நாள்‌தோறும் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2007ம் ஆண்டு ராம பரிவாரங்கள், ராதா-கிருஷ்ணர், மீனாட்சி, சிவன், சுப்ரமணியர், பாலாஜி, ஐயப்பன், சத்யநாராயணர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆலய முகவரி : Hindu Society of Minnesota
10530 Troy Lane North
Maple Grove, MN 55311

இணையதளம் : https://www.hindumandirmn.org/

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி வெள்ளி ரத யாத்திரை

நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி வெள்ளி ரத யாத்திரை...

மனதை கொள்ளை கொண்ட வயலினிசை

மனதை கொள்ளை கொண்ட வயலினிசை...

அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி

அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி...

சிட்னியில் 13 அடி உயர சிவபெருமான் சிலை

சிட்னியில் 13 அடி உயர சிவபெருமான் சிலை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)