சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய “ பத்திரிகையாளருடனான கலந்துரையாடல் நிகழ்வு லிட்டில் இந்தியா, ஆனந்த பவன் உணவக வளாகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழகப் பத்திரிகையாளர் வைத்தியநாதனை அறிமுகப்படுத்தி வரவேற்றார். வைத்தியநாதன் தமது உரையில் சிங்கப்பூர் படைப்பாளர்களை ஊக்குவிக்கத் தமது நாளேடு உதவும் என்றும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை இதற்கான திட்டம் வகுத்தால் தாம் உதவுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு பெற்றவர்களின் ஐயங்களுக்குத் தக்க பதிலுரை வழங்கினார். நிகழ்வில் சிங்கப்பூர்த் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், கவிமாலை அமைப்பின் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன், மூத்த நாடக ஆசிரியர் ஏ.பி.ராமன், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத் தலைவர் ரத்தின வெங்கடேசன் மற்றும் கவிஞர்கள், படைப்பாளர்கள் பங்கேற்றனர். எழுத்தாளர் கழகப் பொருளாளர் கவிஞர் ராம.வைரவன் நன்றி கூறினார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்...
தற்போதைய செய்தி
புதுடில்லி: உ.பி., மற்றும் மேற்கு வங்க மாநில பா.ஜ., பொறுப்பாளர்களை அதன் கட்சி தலைவர் ராஜ்நாதசிங் நியமித்துள்ளார். அதன்படி உ.பி., மாநில பொறுப்பாளராக குஜராத் மாநில ...
மே 19,2013 IST