தலவரலாறு : மலேசியாவின் கெலாங்டன் மாகாணத்தில் கோட்டா பாரு பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு சிவ சுப்ரமணியர் ஆலயமாகும். கெலாங்டன் மாநிலத்தில் சைவ சமயத்திற்கென கோயில்கள், இந்து சமூக மண்டபங்கள், பள்ளிகள், அறநிலையங்கள் மற்றும் இடுகாடுகள் முதலியவற்றை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் குறிக்கோளுடன் 1965-ம் ஆண்டு இந்து சபா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கெலாங்டன் இந்து சபாவின் முதல் திட்டமாகக் கோட்டா பாரு நகரில் சுப்ரமணியருக்கு ஆலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக நிதியும் திரட்டப்பட்டது. எனினும் கோயில் கட்டுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. 1976-ம் ஆண்டு ஜாலான் ஜைனால் அபிடினில் ஒரு புற்று ஒன்று தோன்றியது. அந்த புற்றிலிருந்து நாகம் தென்பட்டதை தெய்வீக செயலாக போற்றி, அன்று முதல் அவ்விடத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வந்தனர். சிறிது நாட்களில் அந்த சிறிய புற்றைச் சுற்றி ஒரு சிறிய கோயிலை அமைத்தனர். நாளடைவில் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இக்கோயில் பெருமளவில் பிரபலமடைந்து கோட்டா பாருவில் இருக்கும் இந்துக்களின் தெய்வ தலமாகவும் அமைந்தது. இக்கோயில் சிவசக்தி ஆலயம் எனவும் பெயர் பெற்றது. சுமார் 25 ஆண்டுகளாக சிவசக்தி ஆலயம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்து மதத்தினர் சிலர் ஒன்று கூடி தேவாரம், பஜனை, தமிழ் வகுப்புக்கள் ஆகியவற்றை துவங்கி சமூக தொண்டுகள் பல புரிந்தனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஜாலான் ஹம்சா என்ற இடம் கோயில் கட்டுவதற்காக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இடுகாட்டின் முழு இடமும் கோயிலின் வசம் வராது ஒரு பகுதி மட்டுமே பெறப்பட்டது. 1996-ம் ஆண்டு நகராண்மை வளர்ச்சிக்காக சிவசக்தி ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சிவசக்தி ஆலயம் கோட்டா பாரு பகுதியில் சிறிய அளவில் இருந்தாலும் மக்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால் அவ்விடத்தில் சிவாலயம் ஒன்றை எழுப்ப இந்து சபையினரும், கோயில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர். அதற்காக இருதரப்பினரும் கூடி முடிவு செய்து அரசிடம் கலந்தாலோசிக்க முடிவு செய்தனர். சிவனே முருகன்,சுப்ரமணியரே சிவன் என்ற கோட்பாட்டின் படி இந்து சபாவினர் 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் இக்கோயிலுக்கு சுப்ரமணியர் கோயில் என்ற பெயர் மாற்றப்பட்டு சிவசுப்ரமணியர் ஆலயம் என பெயர் மாற்றப்பட்டது. 2002-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இப்புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முதலில் இக்கோயிலுக்கான மண்டபம் மட்டுமே கட்ட அனுமதி பெறப்பட்டது. பின்னர் சில காலங்களுக்கு பிறகு கோபுரத்துடனான ஆலயம் ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
கோயில் முகவரி : Arulmigu Siva Subramaniyar Temple, Kelantan Hindu Maha Sabah, PT 121, Jln Hamzah, 15050 Kota Bharu, Kelantan Darul Naim, Malaysia
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திதர்மபுரி:பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வன்முறை சம்பவங்களில் ...
மே 24,2013 IST