தமிழ் பேசும் சீன வானொலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் பேசும் சீன வானொலி

ஏப்ரல் 11,2013  IST

Comments

“தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவியின் கனவினை மெய்பிக்கும் விதமாக வேற்று நாட்டினர் மொழியினைக் கற்று, திறம்படக் கையாண்டு, தமிழோசையைப் பரப்புவது சிறப்பான விஷயமல்லவா? இப்பணியை தான் தொடர்ந்து 50 வருடங்களாக செம்மையாக செய்து வருகின்றனர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவினர். 61 உலக மொழிகளில், ஹிந்தி, வங்காளம், தமிழ் என்ற மூன்று இந்திய மொழிகளில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளை தருகிறது சீன வானொலி. தமிழ் பேசும் சீன வானொலி தமிழ் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவரும் தனி ரகம். அவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சியில் தத்தம் விருப்பங்களைச் சுவையான முறையில் தரும் போது, தமிழை மேன்மேலும் கற்றுச் சிறக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட போது, தமிழொலியும் தமிழோசையும் பரப்பும் இந்தத் தமிழ்க் காவலர்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தத் தோன்றியது.
எத்தனை தான் கணிப்பொறியும் தொலைக்காட்சியும் இருந்த போதும், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் அதைப் பலரும் கேட்டுப் பயன்பெறுவதை மின்னஞ்சல் மூலமும் நேருக்கு நேர், நேயர் நேரத்தில் குரல்களின் மூலம் கேட்கும் போது, அவர்களது தமிழ்ப் பணி மேலும் சிறப்பாகத் தொடர நல்வாழ்த்துக்களை தமிழ் விரும்பும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாகக் கூற விரும்புகின்றேன். வானொலியின் பணி தொடர்ந்து, தமிழ் நேயர்களுக்கு சீனா பற்றிய செய்திகள் பலவற்றையும் அறியும் வாய்ப்பினை ஏற்படுத்தி, மேன்மேலும் வளர யாவரும் வாழ்த்துக் கூறுவோம்.தற்போது இவ்வானொலியின் பொன்விழாவினையொட்டி ஒரு கட்டுரை போட்டியையும் அறிவித்துள்ளனர். சீன வானொலியுடனான நட்பினை வெளிப்படுத்தும் படியான கட்டுரையாக இது இருக்க வேண்டும். மே மாதம் 31 ம் தேதி வரை கட்டுரைகளை அனுப்பலாம்.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மெல்பேனில் தியாகராஜர் உற்சவம்

மெல்பேனில் தியாகராஜர் உற்சவம்...

துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு

துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு ...

குவைத்தில் பொன்மாலை பொழுது

குவைத்தில் பொன்மாலை பொழுது...

துபாயில் சித்ராபவுர்ணமி விளக்கு பூஜை

துபாயில் சித்ராபவுர்ணமி விளக்கு பூஜை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2015 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us