கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலயம், மலேசியா

ஜூலை 07,2008  IST

Comments

தலவரலாறு : மலேசியாவின் பெராக் மாநிலத்தின் ஈப்போ பகுதியில் அமைந்துள்ளது கல்லுமலை சுப்ரமணியர் ஆலயம் எனப்படும் குகைக் கோயில்.பாரிட் முனிசாமி உடையார் என்பவரிடம் வேலை பார்த்து வந்த கல் உடைக்கும் தொழிலாளியான மாரிமுத்து என்பவர், தனது பணியின் காரணமாக குனோங் சீரோவில் உள்ள கல்லுமலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இங்கே வா என யாரோ அழைப்பது போன்று குரல் கேட்டு திகைப்படைந்தார். மீண்டும் அதே போன்ற குரலொலி மலைப்பகுதியில் இருந்து வருவதைக் கண்டு திகைப்படைந்தார். இச்செய்தியை உடனடியாக தனது முதலாளியிடம் தெரிவித்தார். முதலில் அதனை பெரிதுபடுத்திக் கொள்ளாத பாரிட் முனிசாமி உடையார், பின்னர் அதனை பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் தனது தொழிலாளர்களை அழைத்து கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார். அவர்கள் ஆராய்ந்த போது பயங்கர இருள் சூழ்ந்த குகை ஒன்றை கண்டறிந்தனர். தீப்பந்தங்களுடன் உள்ளே சென்று பார்த்த போது, அங்கே சாம்பிராணி,கற்பூரம், ஊதுபத்தி போன்ற வாசனைகள் வருவதைக் கண்டு அதன் ரகசியத்தை அறிய முற்பட்டனர். அப்பொழுது திருமுருகன் சாயலில் கல்லில் அமைந்த உருவத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். அக்குகை திருமுருகன் குடிகொண்டுள்ள இடமாக கருதப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1889-ம் ஆண்டு குனோங் சீராவின் கல்லுமலைக் குகையில் அருள்மிகு சுப்ரமணியர் கோயில் அமைக்கப்பட்டது. இந்த குகைக் கோயில் மக்களின் வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைக்கப்பட்ட பின்னர், சுங்கைப்பாரியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலுக்கும் இக்குகை கோயிலுக்கும் ஒரே நிர்வாகமாக மாற்றி அமைக்கப்பட்டது. அன்று முதல் தைப்பூச காவடி காணிக்கைகள் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து கல்லுமலை சுப்ரமணியர் கோவிலுக்கு கொண்டு செல்லும்படியான முறை ஏற்பட்டது. 1926-ம் ஆண்டு நடைபெற்ற தைப்பூச விழாவின் போது, குனோங் சிரோ சரிவில் இருந்த பெரிய பாறை ஒன்று உடைந்து விழுந்ததில் இரு அர்ச்சகர்கள் மரணமடைந்தனர். இதனால் குகாலயத்தை அங்கிருந்து அகற்றும்படி அரசு உத்தரவிட்டது. எனவே ஆலயத்தை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் புதிய கோயில் நிர்மானிக்கப்பட்டது. 1930-ம் ஆண்டு வரை குகாலயமாக இருந்த கல்லுமலை கந்தன் ஆலயம், 1932-ம் ஆண்டில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கோபுரத்துடன் தகரத்தாலான கூரை மண்டபமாக அமைக்கப்பட்டது. 1932-ம் ஆண்டு இறுதியில் இப்புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் இக்கோயிலுக்கான பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டன. தைப்பூச உற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கோயிலுக்கு இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டுமல்லாது பிற இனத்தை சார்ந்த மக்களும் வரத் துவங்கினர். 1954-ம் ஆண்டு தமிழ் உயர்நிலைப் பள்ளி அமைக்க 15,000 ரிங்கிட் செலவில் மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு அரசின் அனுமதி கிடைக்காததால் அம்மண்டபம் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், முக்கிய விழாக்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இம்மண்டபம் திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படும் கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1969-ம் ஆண்டில் 34,000 வெள்ளி செலவில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவரும், 6500 ரிங்கட் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயில் வளைவும் கட்டப்பட்டது. 1970-ம் ஆண்டு இக்கோயிலுக்கான விரிவாக்க பணிகள் நடத்தப்பட்டு, அவ்வாண்டு இறுதியிலேயே கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பின்னர் பெருமக்கள் பலர் பண உதவி மற்றும் பக்தர்களின் நன்கொடைகளைக் கொண்டு விநாயகர் மற்றும் அம்மன் சன்னதிகள் அமைக்கப்பட்டது. மேலும் கோபுரத்தின் மூன்று புறங்களிலும் மாடங்கள் அமைத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

முக்கிய விழாக்கள்: தைப்பூசம் மற்றும் கந்தசஷ்டி விழா ஆகியன இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களாகும். தைப்பூச விழாவின் போது நடபெறும் ரத யாத்திரை அருகில் உள்ள மகா மாரியம்மன் கோயில் வரை கொண்டு செல்லப்படுகிறது. இவ்விழாவின் போது காவடிகளும் எடுக்கப்படுகின்றன.

கோயில் நேரங்கள்: காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கிறது. காலை 6.30 மணிக்கு காலை பூஜையும்,மாலை 6.30 மணிக்கு மாலை பூஜையும் நடத்தப்படுகிறது.

கோயில் முகவரி :

Ipoh Hindu Devasathana Paripalana Sabah

No. 140, Jalan Raja Musa Aziz,

30300 Ipoh,

Perak Darul Ridzuan, Malaysia

தொலைப்பேசி : 05-2415101, 05-2540291

தகவல் தொடர்பு :

President : Thiru N. Sithambaram AMN., PPT.- 012-5317051

Secretary : Thiru P. Palaiyah - 012-5403403

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி

துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி ...

குவைத்தில் குழந்தைகள் தின விழா

குவைத்தில் குழந்தைகள் தின விழா...

சிங்கப்பூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா...

கென்யாவில் குழந்தைகள் தினவிழா

கென்யாவில் குழந்தைகள் தினவிழா...

Advertisement
Advertisement

லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு சிறை தண்டனை

காரைக்கால்: லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுக்கு, கோர்ட், ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்தது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால், மதகடியைச் சேர்ந்தவர் முகமது ரபீக், 25. கடந்த ...

நவம்பர் 21,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us