தலவரலாறு : மலேசியாவின் தலைநகர் எனப்படும் மாநிலத்தில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள கண்கவர் ஆலயம், அருள்மிகு திருமுருகன் ஆலயமாகும். இக்கோயில் 1950-ம் ஆண்டு துவங்கப்பட்டது. முதலில் இக்கோயிலின் வழிபாடு அரச மரத்தடியிலேயே நடத்தப்படுகிறது. 1960-ம் ஆண்டில் துத்தநாக முலாம் பூசப்பட்ட கூரை கட்டப்பட்டது. 1966-ம் ஆண்டு இக்கோயில் பெரிய அளவில் புதிதாக கட்டப்பட்டது. தென்னியந்தியர்களின் அமோக ஆதரவினால் இக்கோயில் விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1998-ம் ஆண்டு இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முக்கிய விழாக்கள்: ரத ஊர்வலத்துடன் 10 நாட்கள் நடைபெறும் சித்ரா பவுர்ணமி இக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோயில் நேரங்கள் : காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கிறது. காலை 7 மணிக்கு காலை பூஜை மற்றும் மாலை 7 மணிக்கு மாலை பூஜை நடத்தப்படுகிறது. மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையின் மாலை நேரங்களில் தேவார வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
கோயில் முகவரி : Thirumurugan Aalayam Paribalana Sabai, Lorong Raja Muda, Hospital Kuala Lumpur, 50400 Kuala Lumpur, Wilayah Persekutuan, Malaysia
தகவல் தொடர்பு : President: Thiru M. Arumugam - 03-42534548 Vice-President: Thiru N. Suresh Kumar - 019-3607125 Asst-Secretary: Thiru P. Arumugam - 012-2908536
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திமும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று 400 புள்ளிகளுக்குமேல் வீழ்ச்சியடைந்து 19659 புள்ளிகளாக இருந்தது. இது போல் தேசிய பங்குசந்தையான நிப்டியும் 131 புள்ளி சரிந்து 5963 ...
மே 23,2013 IST