அருள்மிகு சுப்ரமணியர் பாலதண்டாயுதபாணி ஆலயம்,மலேசியா

ஜூலை 17,2008  IST

Comments

தலவரலாறு : மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் லோபாக், சிரம்பான் பகுதியில் அமைந்துள்ள மனதை கொள்ளை கொள்ளும் அழகுடைய ஆலயம், அருள்மிகு சுப்ரமணியர் பாலதண்டாயுதபாணி ஆலயமாகும். சிரம்பான் கே.ஜி.வி. ஆங்கிலப் பள்ளித் திடலில், 1883-ம் ஆண்டு இக்கோயில் நமது முன்னோர்களால் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் திம்மியாங், கம்மிங் சாலையில் ஆலயம் அமைப்பதற்கு மாற்று இடத்தை அரசு வழங்கியதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஆலயம் நிறுவப்பட்டது. சீனர்களே அதிகம் வசித்த திமியாங், கம்மிங் சாலையில் ஆலய வழிபாட்டை தொடர்வதை சிரமமாக எண்ணிய இந்துக்கள், 1935-ம் ஆண்டு இந்துக்கள் வசிக்கும் இடத்தில் ஆலயத்தை மாற்றி அமைக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 1936ம் ஆண்டில் அரசாங்கம் லோபாக் பகுதியில் இந்த ஆலயத்தை நிறுவுவதற்கான இடத்தை வழங்கியது. 1965ம் ஆண்டு, ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு முதல் முறையாக ஆலயத்தின் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1977ம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. 1978ம் ஆண்டு ஆலயத்திற்கு நிரந்தர நில உரிமை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நீண்ட கால முயற்சிக்கு பிறகு, 1981-ம் ஆண்டு 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்துடனான, நில உரிமை பட்டாவினை மாநில அரசு இலவசமாக ஆலய நிர்வாகத்திடம் வழங்கியது. அதே ஆண்டில் ஆலய வளர்ச்சி நிதிக்காக மாநில அரசு உதவி மான்யமும் ஆலயத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 1987ம் ஆண்டு ஆலய கல்நாட்டு விழா நடைபெற்றது. ஆலயத் திருப்பணி வேலைகள் முழுமைப்பெற்று, 8-11-1992 ல் ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. 1999ம் ஆண்டு ஆலயத்தின் நுழைவாயில் மண் சரிவு ஏற்பட்டு ஆலயத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் அரசு நிதி வழங்கப்பட்டு 178,000 வெள்ளி செலவில் ஆலய முன்புறம் பெரிய மதில்சுவர் எழுப்பட்டது. அதற்கான பணிகள் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுப்பெற்றது. பின்னர் 2005-ம் ஆண்டு மீண்டும் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

முக்கிய விழாக்கள்: ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் வருடாந்திர திருவிழா இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோயில் நேரங்கள்: காலை 5.15 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5.15 மணி முதல் இரவு 9 மணி முதல் கோயில் திறக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு 9.30 மணி வரை கோயில் திறந்திருக்கிறது. காலை 7 மணிக்கு காலை பூஜையும், மாலை 7 மணிக்கு மாலை பூஜையும் நடத்தப்படுகின்றன. வெள்ளிக்கிழமையன்று மாலை 7.30 மணிக்கு மாலை பூஜை நடத்தப்படுகிறது. மேலும் இக்கோயிலில் தேவாரம் (பஜனை) மற்றும் நாட்டிய வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.

கோயில் முகவரி :

Kuil Sri Subramaniar Balathandayuthapani,

No. 439, Jalan Tan Sri Manickavasagam,

Lobak, 70200 Seremban,

Negeri Sembilan Darul Khusus, Malaysia

தகவல் தொடர்பு :

President: Thiru R. Rajendran - 016-6918999மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மின்னேபோலிசில் கோதா கல்யாணம்

மின்னேபோலிசில் கோதா கல்யாணம்...

சிங்கப்பூரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி

சிங்கப்பூரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி ...

அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ...

ஹாங்காங்கில் லாஸ்யோத்சவம்

ஹாங்காங்கில் லாஸ்யோத்சவம்...

Advertisement
Advertisement

சிரியாவில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

பெய்ரூட்:டெய்ர் எஸ்ஸோர் விமான தளத்தைக் கைப்பற்றுவதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு தாக்குதலைத் தொடங்கினர்.இதில் 20 பயங்கரவாதிகள் ...

டிசம்பர் 23,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us