ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில், நியூயார்க், வடஅமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில், நியூயார்க், வடஅமெரிக்கா

டிசம்பர் 11,2014  IST

Comments

ஆலய குறிப்பு : வட அமெரிக்காவின் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் சார்பில் நியூயார்க் நகரில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் அமைக்கப்பட்டது. உலகிலேயே இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முதல் நவகிரக மற்றும் சனீஸ்வர பகவான் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் நகரில் ஆன்மிகத்தையும், கலைகள் சார்ந்த கல்விமுறையையும் பரப்ப எண்ணிய திருமதி ரூபா ஸ்ரீதர் மற்றும் நவகிரக தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களும் அப்பகுதி கோயில்கள் மற்றும் சமூக மையங்களுடன் இணைந்து அமெரிக்கா முழுவதும் நவகிரகங்களுக்கென தனித்தனி கோயில்கள்களை அமைக்க திட்டமிட்டனர். இதன்படியாக வடஅமெரிக்காவின் வேத கலாச்சார மற்றும் ஆன்மிக அமைப்புக்களுடன் இணைந்து நியூயார்க்கின் சனீஸ்வர பகவானுக்கென தனிக்கோயிலை அமைத்தனர். 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி, மகாஹோமம் மற்றும் ஜபம் நடத்தப்பட்டு, இக்கோயிலின் பிரணபிரதிஷ்டை மற்றும் மகாகம்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக பூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக இந்தியாவில் இருந்து பிரத்யேகமாக வேத விற்பனர்களும், பண்டிதர்களும் வரவழைக்கப்பட்டனர்.

நியூயார்க்கில் உள்ள வேத பாடசாலைகள், இந்திய கர்நாடக இசை மற்றும் நடன பள்ளிகள், தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழி பாட வகுப்புக்கள், யோகா மற்றும் ஆன்மிகம் சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலேயே நியூயார்க் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் உருவானது. இவ்வாலயம் தற்போது ஆன்மிக பயிற்சிகள் நடத்தும் இடமாகவும், கலாச்சார நிகழ்வுகளின் சங்கமமாகவும் திகழ்கிறது.
ஆலய நேரம் : காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.
ஆலய முகவரி : Shri Saneeswara Temple New York, 95-30 225th Street, Queens Village,NY 11429
ஆலய தொலைப்பேசி : (718) 740 9400
இமெயில் : temple.navagraha@gmail.com
இணையதளம் : www.navagrahausa.com

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா

சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா...

மலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

மலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ...

துபாய் கலாட்டா குடும்பத்தாரின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

துபாய் கலாட்டா குடும்பத்தாரின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்...

அஜ்மானில் சைக்கிள் போட்டி

அஜ்மானில் சைக்கிள் போட்டி...

Advertisement
Advertisement

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு

புதுடில்லி : 'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, ...

ஏப்ரல் 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)