தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

டிசம்பர் 14,2014  IST

Comments

தாரஸ்ஸலாம் : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் லோகன மஹாஜன் அரங்கில் வைத்து நடைபெற்றது. தலைவர் சிவகுமார் அனைவரையும் வரவேற்று, இந்த ஆண்டின் சங்கச் செயல்பாடுகளையும் செய்த நலத்திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்து சங்க நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் வரும் 2015 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக கிருபாகரன், ரிஸ்வான் ஆகியோர் செயல்பட்டு புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிவித்தனர். தலைவர்: அண்ணாத்துரை, துணைத் தலைவர் : பி. ரமேஷ் , செயலர் : மதன் குமார், பொருளாளர் : எஸ்.கே. ரமேஷ் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக, அந்தோணி பர்னாண்டோ,பத்மநாபன், குருகோவிந்தன், மார்டின் சேவியர், ராஜேஷ் சந்திரன்,ஜெயராமன் சம்பத், திருமதி.சரண்யா அன்புமணி, திருமதி.நிரஞ்சனா சுதிர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த ஆண்டின் சங்கத்தின் செயல்பாடுகள் நேர்த்தியாக இருந்ததாக பலரும் பாராட்டினர். புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். சுவையான மதிய உணவோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது. - நமது செய்தியாளர் செய்யது ஹோஷ்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சரவண பவன், சைவ உணவகம், கோலாலம்பூர்

சரவண பவன், சைவ உணவகம், கோலாலம்பூர்...

சரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்

சரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்...

சரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்

சரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்...

சரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்

சரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்...

Advertisement
Advertisement

கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு

திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் இரண்டு மணிநேரத்தில் மீட்டனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் ...

அக்டோபர் 21,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)