தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் வெஸ்டன் கிரீக் பகுதியில் அமைந்துள்ள மலைகளுக்கு அருகே கட்டப்பட்டுள்ள அழகும் நவீனமும் இணையப்பெற்ற ஆலயம், அருள்மிகு விஷ்ணு சிவா திருக்கோயிலாகும். இக்கோயில் 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. சிட்னியிலிருந்து கான்பராவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள், கிருஷ்ண ஜெயந்தி விழாவினை கொண்டாட எண்ணினர். அதற்காக ஒரு வீட்டில் ஒன்றிணைந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடினர். இதனை தொடர்ந்து மாதந்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் முதல் பூஜை 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி புத்தாண்டு தினத்தன்று ஸ்டெர்லிங் கல்லூரியில் துவங்கப்பட்டது. இந்த பூஜைகளுக்கான செலவுத் தொகை, இந்தியர் திருக்கோயில் சங்கம் என்ற பெயரில் வங்கியில் சேமிக்கப்பட்டது. மாதாந்திர பூஜைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. மேலும் 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆண்டிற்கு இருமுறை நவராத்திரி விழாவும், இந்துக்களின் அனைத்து விதமான பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது. தனியாக கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு, 1986-ம் ஆண்டு நடத்தப்பட்ட தசரா பூஜை முதல் நன்கொடைகள் பெறப்பட்டன. இக்கோயிலுக்கான நிலம் அனுமதி கோரிக்கை 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், மாவ்சன் பகுதியில் ஆஸ்திரேலிய அரசு இக்கோயிலுக்கான குத்தகை நிலத்தை ஒதுக்கித் தந்தது. பாதி மனதாக அதனை ஏற்றுக் கொண்ட கோயில் நிர்வாகத்தினர் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கோயில் கட்டும் பணியினை துவங்கினர். திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 1994-ம் ஆண்டு நவம்பர் மாதம் நில மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு சட்ட அமைச்சர் பில் உட் என்பவரால் இக்கோயில் திறந்து வைக்கப்பட்டது. அன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் கோயில் திறக்கப்பட்டு வருகிறது.
கோயில் முகவரி : Mandir Society of Australia Incorporated
P O Box 3259
Weston Creek, 2611
ACT, Australia
தொலைப்பேசி : +61 2 6282 2202
இ-மெயில் :mandir@mandir1.org.au
இணையதள முகவரி : www. mandir1.org.au
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திநியாமே : ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, நைஜரில், இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக, கார் குண்டுகள் வெடித்துள்ளன. அகாடஸ் நகரில், "அரேவா' என்ற அணுசக்தி நிறுவனம் ...
மே 23,2013 IST