அருள்மிகு கணேசர் திருக்கோயில், டெக்ஸாஸ்

ஆகஸ்ட் 07,2008  IST

Comments

தலவரலாறு : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலானோ பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட ஆலயம், அருள்மிகு கணேசர் திருக்கோயிலாகும். 2005-ம் ஆண்டு பிலானோ பகுதியில் வாழ்ந்த நண்பர்கள் சிலர் கலாச்சார மற்றும் வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். அதற்காக வடக்கு டெக்ஸாஸ் பகுதியில் இந்துக்களுக்கான வழிபாட்டுத்தலம் அமைக்க தீர்மானித்தனர். இறுதியாக இருபது பேர் இணைந்து இந்த எண்ணங்களுக்கான செயல் வடிவம் கொடுத்ததுடன், புதிய அமைப்பிற்கான பெயர், பணிகள், அமைவிடம் மற்றும் உபயதாரர்கள் போன்ற விபரங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு டெக்ஸாஸ் இந்துக் கோயில் தற்காலிக அதிகாரிகளைக் கொண்டு அருள்மிகு கணேசர் திருக்கோயில் என்ற பெயரில் இயங்கி வந்தது. இந்நிறுவனம் சேவை மனப்பான்மையிலான தொண்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் பிலானோ பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து 75 நிமிட தொலைவில் இக்கோயில் திறக்கப்பட்டது. கணேசர் மற்றும் சிவன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் வள்ளி- தெய்வாணை சமேத முருகன் சிலையும், 2007-ம் ஆண்டு குருவாயூர் கிருஷ்ணன், ஐயப்பன், ஹனுமன், துர்க்கை மற்றும் ஸ்ரீதேவி -பூதேவி சமேத வெங்கடேஷ்வரர் மற்றும் பரிவார தேவதைகளான சுதர்சனர் மற்றும் கருடர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் அமோக ஆதரவினால் கோயிலுக்கான 10 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இது தற்போதுள்ள இடத்திலிருந்து 3 மைலுக்கும் குறைவான தூரத்திலேயே உள்ளது. கோயிலுக்கான கருங்கல் சிலைகள் அமைத்தல், கல்வி மையம், கலாச்சார சாதன மையம் மற்றும் திருமண மண்டபம் போன்றவற்றை உள்ளடக்கிய நிரந்தர கணேசர் கோயிலுக்கான ஐந்தாண்டு திட்டங்கள் திடமிடப்பட்டன. இரண்டு வருடங்களையும் கடந்து இக்கோயில் கலாச்சார மற்றும் ஆன்மிக தேடலாகவும் திகழ்கிறது. இக்கோயிலுக்கென இரண்டு பிரத்யேக அர்ச்சகர்களும் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி தினத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். நவராத்திரி, தீபாவளி மற்றும் வைகுண்ட ஏகாதேசி போன்ற நாட்களிலும் இக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். விரைவில் இப்பகுதியில் இக்கோயிலுக்கான நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் கோயில் திறக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறக்கப்படுகிறது. தினசரி பகல் 12 மணி மற்றும் இரவு 7.45 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறுகிறது.

கோயில் முகவரி :Sri Ganesha Temple
                                   910 West Parker Road, Suite 340
                                   PLANO, TX 75075
                                   (South East Corner of Parker and Alma) 


தொலைப்பேசி : 972.943.9543

இ-மெயில் : ganesh@htnt.org
இணையதள முகவரி : www.htnt.orgமேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சவுதி அரேபியாவில் ஜெயலலிதா பிறந்தநாள்

சவுதி அரேபியாவில் ஜெயலலிதா பிறந்தநாள்...

சிங்கப்பூரில் சிறப்பிதழ் அறிமுக விழா

சிங்கப்பூரில் சிறப்பிதழ் அறிமுக விழா...

சிட்னியில் "தியாகராஜ ஆராதனை" விழா

சிட்னியில் "தியாகராஜ ஆராதனை" விழா...

சிங்கப்பூரில் பேருந்து நகர்வலக் கவிமாலை

சிங்கப்பூரில் பேருந்து நகர்வலக் கவிமாலை ...

Advertisement
Advertisement

மீனவ பிரநிதிகள் வரும் 12ம் தேதி பேச்சு

கொழும்பு: 'இந்திய - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை, வரும், 12ம் தேதி மீண்டும் துவங்கும்' என, அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேரா ...

மார்ச் 03,2015  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2015 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us