அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்

ஆகஸ்ட் 09,2008  IST

Comments

தலவரலாறு : சிங்கப்பூரின் மையப் பகுதியாக கருதப்படும் யூசுன் ஹவுசிங் எஸ்டேட் பகுதியில் இந்த மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 1930-ம் ஆண்டிற்கு முன்னதாக இக்கோயில் இளஞ்சிவப்பு கோயில் என்றே பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இக்கோயில் சுமார் 74 ஆண்டுகளுக்கு முன் செம்பவாங் ஹில்ஸ் எஸ்டேட் பகுதியில் துவங்கப்பட்டு, 1940-களில் மண்டாய் பகுதியல் மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு சுமார் 2000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் யூசுன் அவென்யூ பகுதியில் நிலையான தற்போதைய கோயில் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள கோயில் கட்டிடம் 1997-ம் ஆண்டு மே 18-ம் தேதி கட்டப்பட்டதாகும். சிங்கப்பூரின் வட பகுதியில் அமைந்துள்ள இந்து மதச் சின்னமாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் வழிபாட்டத் தலமாக செயல்படுவதுடன், திருமணம், கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெறும் மையமாகவும் இயங்கி வருகிறது. நுழைவு வாயிலை அடுத்து உள்ள அனைத்து பகுதிகளும் குளிரூட்டப்பட்டுள்ளன. மேலும் இக்கோயிலில் ஒரே நேரத்தில் 500 பேர்கள் அமர்ந்து கடவுளை தரிக்கும் படியான வசுதிகளும் செய்யப்பட்டுள்ளன. காடிப் எம்ஆர்டி ஸ்டேஷனிலிருந்து இக்கோயில் நடந்து செல்லும் தூரத்திலேயே அமைந்துள்ளது. யூசுன் பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயிலுக்கு நேரடி பஸ் வசதியும் உள்ளது. இக்கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி இப்பகுதியில் கல்வி, சமூக மற்றும் மத நிகழ்வுகள் நடைபெறும் மையமாகவும் செயல்படுகிறது.

கோயில் முகவரி :

SREE MAHA MARIAMMAN TEMPLE

051 Yishun Avenue 3, Singapore - 769061.

தொலைப்பேசி : 67566374 / 67561208
பேக்ஸ் : 67566064

இ-மெயில் : maha.mariamman@pacific.net.sg

இணையதள முகவரி : www. sreemahamariamman.com



மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மின்னேபோலிசில் கோதா கல்யாணம்

மின்னேபோலிசில் கோதா கல்யாணம்...

சிங்கப்பூரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி

சிங்கப்பூரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி ...

அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ...

ஹாங்காங்கில் லாஸ்யோத்சவம்

ஹாங்காங்கில் லாஸ்யோத்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us