அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்,சிங்கப்பூர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்,சிங்கப்பூர்

ஆகஸ்ட் 14,2008  IST

Comments

தலவரலாறு : சிங்கப்பூரிலுள்ள செராங்கூன் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், 1800-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் பிரபலமான சிலரால் துவக்கப்பட்டதாகும். கிழக்கிந்திய கம்பெனிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இவர்கள் வைணவர்களுக்கான இந்துக் கோயில் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். இவர்கள் 1851-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து சுமார் 2 ஏக்கர் நிலத்தினை இந்திய ரூபாய் 26-றிற்கு வாங்கினர். 1885-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் நரசிங்கப் பெருமாள் கோயில் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. பின்னர் கூடுதல் கட்டிடத்திற்கான நிலமும் பெறப்பட்டது. மேலும் 1894-ம் ஆண்டு ஏராளமான நிலங்களும் பக்தர்களின் மூலம் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. 1950-க்கு ஆண்டின் முற்பகுதியில் இக்கோயில் சீரமைக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு இக்கோயில் முகமதிய மற்றும் இந்து அறக்கட்டளை குழு சார்பில் சீரமைக்கப்பட்டு, மறுகட்டமைப்பு நடத்தப்பட்டது. 1960-களின் முற்பகுதியிலேயே இக்கோயிலின் சீரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக இரண்டு பிரிவுகளைக் கொண்ட திருமண அறைகள் கட்டப்பட்டு 1965-ம் ஆண்டு ஜ’ன் மாதம் 19-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் விநாயகர் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் பிரகாரங்கள் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் பெரியோர்களின் ஆலோசனைபடி மூலவரான நரசிம்மன் என்ற பெயர் மாற்றப்பட்டு சாந்த சொரூபமான அருள்மிகு சீனிவாச பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. 1979-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் கூடுதல் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, புதிய கோபுரம் நிறுவப்பட்டது. 1970-களில் இக்கோயில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. 1978-ம் ஆண்டு அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் தேசிய நினைவுச் சின்னமாக, நினைவுச் சின்ன பாதுகாப்பு சங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இக்கோயில் 1987, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. பல்வேறு நிலைகளாக முன்னேற்றமடைந்த இக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. இவைகள் நிர்வாக குழுவினரால் தொடர்ந்து நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதே இக்கோயிலின் மிகப் பெரிய புகழ் ஆகும். இக்கோயிலில் இந்து மத முறைப்படி அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், தூண்கள் மற்றும் வேலைப்பாடுடன் அமைந்த மண்டபங்களும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கோயிலில் சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

முக்கிய விழாக்கள் : தைப்பூசம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதேசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமை ஆகியன இக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானவையாகும்.

கோயில் நேரங்கள் : காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறக்கப்படுகிறது.

கோயில் முகவரி :

Sri Srinivasa Perumal Temple,

397 Serangoon Road,

Singapore 218123

தொலைப்பேசி : 6298 5771

பேக்ஸ் : 6298 9884

இ-மெயில் : heb_sspt@pacific.net.sg

இணையதள முகவரி : www.heb.gov.sg/smt/smt-contactus.html

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தான்சானியா தமிழ்ச் சங்கம்

தான்சானியா தமிழ்ச் சங்கம் ...

தான்சானியா, தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்க பொதுக்குழு

தான்சானியா, தாரஸ்ஸலாம் தமிழ்ச் சங்க பொதுக்குழு...

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழா...

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்வு

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்ட நிகழ்வு...

Advertisement
Advertisement

பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி

சென்னை : கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டு கொன்ற சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ...

டிசம்பர் 13,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us