செய்திகள்

கோல்கட்டாவில் பாரதியார் பிறந்த தின விழா

டிசம்பர் 27,2016  IST

 கோல்கட்டா: பாரதி தமிழ்ச் சங்கம், கோல்கட்டா , மகாகவி பாரதியின் 134வது பிறந்த தினத்தை 18.12.2016 ஞாயிறுக்கிழமை காலை 10 மணியளவில் சரத் சமிதி சதன் அரங்கில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. 
பாரதி தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கோல்கட்டாவில்  பாரதி பிறந்ததின நிகழ்ச்சியில் சாதனைகள் பல படைத்த தமிழர் ஒருவருக்கு “சாதனைத் தமிழர்” விருதை அளித்து வருகிறது. அவ்வகையில் சங்கம் தனது பவள விழாவைக் கொண்டாடும் இந்த ஆண்டில் பொன்விழா கண்ட முல்லைச்சரம் இதழின் ஆசிரியரும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் இறுதி நாள் வரை இருந்து தொண்டாற்றிய மாணவரும், பிரபல திரைப்படப் பாடலாசிரியருமான புதுமைக் கவிஞர் பொன்னடியான் அவர்களுக்கு “சாதனைத் தமிழர்” விருதை வழங்கி கௌரவித்தது. கோல்கட்டா  பாரதி தமிழ்ச் சங்கம் ஒரு கவிஞருக்கு சாதனை தமிழர் விருதை வழங்கியது இதுவே முதல்முறை ஆகும். 







இந்நிகழ்ச்சிக்கு பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் Dr. G.V. சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்க Dr.V. ரவிச்சந்திரன் (Director, NIPER, Kolkata) தலைமையுரை ஆற்றினார். விருது மடலை சங்கத்தின் துணைத் தலைவர் திரு S.ஜெயராமன் வாசித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர் Dr. R. சிவக்குமார் I.P.S.(Addl. Commissioner, Kolkata Police) புதுமைக் கவிஞர் பொன்னடியான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி “சாதனைத் தமிழர்” விருதை வழங்கினார். 




புதுமைக் கவிஞர் பொன்னடியான் விருதை பெற்ற பிறகு திரு S. பாலாஜி அருண்குமார் (Dy. Chairman, Kolkata Port Trust, Kolkata), திரு S. மஹாலிங்கம் (தலைவர், வேத பவன்) மற்றும் திரு T. வரதராஜன் (முன்னாள் துணைத் தலைவர், தமிழ் மன்றம், கோல்கட்டா) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கவிஞர் பொன்னடியான் அவர்கள் மிக அருமையாக ஏற்புரை வழங்கினார். 




கவிஞரின் ஏற்புரைக்குப் பிறகு பாரதி பிறந்த தினத்தை முன்னிட்டு சங்கத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கவிஞர் பொன்னடியான் பரிசுகளை வழங்கினார். பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு K.வெங்கடேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை கூறினார். 




சங்கத்தின் உதவிச் செயலாளர் திருமதி சித்ரா சிவராமகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நாட்டு வாழ்த்து மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



Advertisement
மேலும் கோல்கட்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்...

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா...

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்.

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்....

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us