செய்திகள்

டில்லி கோவிலில் ஸ்ரீ சங்கடஹர சதூர்த்தி

மார்ச் 20,2017  IST

புதுடில்லி : கிழக்கு டில்லியில் உள்ள வசுந்தரா என்கிளேவ் இல் இருக்கும் ' சங்கடங்களை தீர்க்கும் '  ஸ்ரீ சங்கடஹர கணபதி கோவிலில் ஸ்ரீ சங்க‌டஹர சதூர்த்தி 16 ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சங்கடஹர சதூர்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. மாலையில் ஸ்ரீ சங்கடஹர கணபதி க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. 

அதே நாளில் பக்தர்கள் கணேஷ சரணம் பாடி வர, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி, கோவில் வளாகத்தற்குள் எடுத்துவரப்பட்டார். அப்போது ஒரு பக்தர், விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடலை பக்தி பரவசத்துடன் பாடி வந்தார். இந்த விழாவுக்கு டில்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் இருந்து மட்டுமல்லாமல் டில்லியின் பிற பகுதி, மற்றும் அருகிலுள்ள நொய்டா, இந்திரபுரம், காஷிபூர், வைஷாலி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான பக்‌தர்கள் வந்திருந்து கணபதியின் அருளை பெற்றனர். அங்கு கூடியிருந்த பக்தர்கள், முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் என்ற கணேச பஞ்சரத்னத்‌தை பாடினர். பின்னர் மகா தீபாரதணைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மோதகம், பஞ்சாமிர்தம், பால் பாயாசம், சுண்டல் ஆகியவை பிரசாதமாக கொடுக்கப்பட்டது.


- நமது டெல்லி வாசகர் எஸ்.வெங்கடேஷ். 

 

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நிருத்திய சங்கீத ரஸா பிரவாக் ராமமூர்த்தி பாகவதர் விழா

நிருத்திய சங்கீத ரஸா பிரவாக் ராமமூர்த்தி பாகவதர் விழா ...

போபால் தமிழ் சங்கத்தினர் சித்திரை திருவிழா

போபால் தமிழ் சங்கத்தினர் சித்திரை திருவிழா...

மும்பை நகைச்சுவை மன்றத்தின் முப்பெரும் விழா

மும்பை நகைச்சுவை மன்றத்தின் முப்பெரும் விழா...

மும்பையில் ராமானுஜர் ஆயிரமாண்டு விழா

மும்பையில் ராமானுஜர் ஆயிரமாண்டு விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us