செய்திகள்

எதிராஜா ராமானுஜா- ஹயக்ரீவா சார்பில் சங்கீத உபன்யாசம்

ஜனவரி 03,2018  IST

புதுடில்லி:  ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா எங்கும் கொண்டாடப்பட்டு வருகிற இந்த நேரத்தில் டில்லி லோதி ரோடு ராமர் கோவிலில் அவரது உபன்யாசம் நடை பெற்றது.
எண்ணற்ற ஞானிகளும் மகான்களும் பிறந்த நாடு இந்த பாரத நாடு. தத்துவ தரிசிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் குறைவில்லாத நாடு இது. அறிவு, பக்தி, தொண்டு இவற்றினூடே இறையுணர்வை வளர்த்தவர்கள் அநேகம் பேர். காலத்திக்கேற்ப தத்துவ விளக்கங்களை தந்து வழிநடத்தியவர்களும், மார்க்கங்களை உருவாக்கியவர்களும் பலர் உண்டு. ஞானம், பக்தி, தத்துவம், தொண்டு, சீர்திருத்தம் ஆகியவற்றுடன் தன வாழ்க்கையையே தன் செய்தியாக முன்வைத்துவிட்டு போனவர்கள் அரிதினும் அரிதானவர்கள். அத்தகைய அரியதொரு மஹான்களில் ஒருவர் ஸ்ரீ ராமானுஜர்.


இன்றைக்கு சரியாக 1000 ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா எங்கும் கொண்டாடப்பட்டு வருகிற நேரத்தில் டில்லி லோதி ரோடு ராமர் கோவிலில் அவரது உபன்யாசம் நடை பெற்றது. ஹயக்ரீவாவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சங்கீத உபன்யாசத்தில் மீனா வெங்கி உரை ஆற்ற, சங்கீத பாசுரங்களை ,கிருதிகளை டாக்டர் வாகீஸ் தலைமையில் அவரது மாணவர்கள் பாடினர். வயலினில் ராகவேந்திர ப்ரசாத்தும், மிருதங்கத்தில் மனோகரும், கடத்தில் மண்ணை கண்ணனும் உடன் வாசித்து சிறப்பித்தனர். கோவில் சார்பில் கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டார்


 - நமது செய்தியாளர் மீனா வெங்கி

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவ விளக்க பூஜை

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவ விளக்க பூஜை...

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்...

நிலவேம்பு கஷாயம் முகாம்

நிலவேம்பு கஷாயம் முகாம்...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us