செய்திகள்

மயூர் விகாரில் வழி அனுப்பும் நிகழ்வு

ஜனவரி 05,2018  IST

டில்லி மயூர் விஹார் பகுதி 1, 1970-80 களில் தமிழர்கள் அதிகம் குடியேறிய பகுதி. டில்லியில் கரோல் பாக், பின்னர் ராமகிருஷ்ணபுரம் தமிழர்களின் அடையாளமாக இருந்த காலம் மாறி டில்லி மாநகரம் விரிவடைந்திட மக்களும் இடம் பெயர்ந்து அடுக்கு மாடி கட்டிடங்களில் குடியேறினார்கள். கிழக்கு டில்லியில் மயூர் விஹார் பகுதி ஒன்று முதலில் ஏற்பட்டது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு ஏற்ப மக்கள் நலம் வேண்டி அங்கு பிள்ளையார் கோவில் மக்கள் முயற்சியால் கட்டப்பட்டது. கோவில் என்பது மதம் சார்ந்த இடம் என்பதை தாண்டி மக்கள் கூடி பிரார்த்தனை செய்யவும், பல சமூகநல .ஆன்மிக, கலாசார செயல்கள் நடைபெறவும் பொது இடமாக ஏற்கப்படுகிறது.


அப்படியாக ஸ்ரீ சுப சித்தி விநாயகர் கோவில் உருவாக பல நல்ல உள்ளங்களின் உதவியோடு தன்னை இணைத்துக்கொண்டு சுமார் இருபத்தைந்து வருடங்கள் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மிக பணிக்காக அர்ப்பணித்தவர் பாலசுப்ரமணியம். பொதுப்பணியில் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் மகத்துவப்பூர்வமானது . கோவில் எழும்பியவுடன் அதனில் நித்யப்பணிகள் முக்கியமானவை. தனது அலுவலக பணியில் இருந்து விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டு கோவில் பணிக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றியவர் பாலசுப்ரமணியம்.
காலம் ஓடிட தனது முதுமை காலத்தை தமிழ் நாட்டில் உறவுகளுடன் அருகில் இருக்க விருப்பம் கொண்டார். அவரது ஆன்மிக பணியை, தன்னலமற்ற சேவையை நினைவு கூர்ந்து அவரை வாழ்த்தி வழியனுப்ப தலைநகரில் அன்பர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர். ராகவ சாஸ்திரிகளின் வேத கோஷத்தோடு தொடங்கி, அவருடன் பல நிலைகளில் பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், நாராயண சுவாமி, சந்திரசேகர், சீதாராமன் ஆகியோர் அவரின் பணிகளால் கோவில் வளர்ந்த விதத்தை நினைவுகூர்ந்தார்கள். தற்போது வெளி மாநிலத்தில் வசிக்கும் வெங்கடாச்சலம் எழுதி அனுப்பிய செய்தி வாசிக்கப்பட்டது. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் குரு க்ருபா என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சங்கீத பணியாற்றி வந்தார். அவரிடம் பயின்ற மகளிர் சார்பாக ராதிகா சந்திரசேகர் வாழ்த்துரை வாசித்தார். 
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்...

நொய்டாவில் ஏகாதசி பஜனை

நொய்டாவில் ஏகாதசி பஜனை...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us