செய்திகள்

துவாரகாவில் ஹயக்ரீவாவின் மார்கழி உத்சவம்

ஜனவரி 05,2018  IST

டில்லி துவாரகா ராம் மந்திரில் ஹயக்வாரீவா இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகளை மார்கழி உற்சவத்தில் நடத்தியது. முதல் நாள் சனி மாலை ஜான்வி ராஜாராமன், தேவிகா ராஜாராமன் சகோதரிகளின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது. ப்ரணவாகாரம், பாபநாசம் சிவனின் பராசக்தி, ஆதிசங்கரரின் அர்தநாரீஸ்வரம் என அடுத்தடுத்து ஆடி அரங்கை மகிழ்வித்தனர். தொடர்ந்து பஜமன் ராம்சரண் சுகாதா யி, குஞ்சன் பனா, சுந்தர் ஷியாம் என பஜனை பாடல்களுக்கு அபிநயித்தனர். பாரதியின் சின்னச்சிறு கிளியே அருமை. மங்களத்துடன் நிறைவு செய்தனர். 
ஞாயிறு அன்று குரு கௌரி ஜகந்நாதன் தனது மாணவ்ர்களுடன் இணைந்து பக்தி சங்கீத நிகழ்ச்சி தந்தார். நின்னுக்கோரி வர்ணன்தாய் தொடர்ந்து கணேச வந்தனம், சரஸ்வதி வந்தனம் குழுவாய் பாடியதை தொடர்ந்து தியாகராஜரின் சலமேலரா சங்கேத ராமா சிறுவன் ஸ்ரீ கிருஷ்ணா அழகாக பாடினார். தீக்ஷிதரின் சதாசரேய அபயாம், தியாகராஜரின் ராமா நீ பை தனகு (கேதாரம்) அவரின் ராமா பக்தியை வெளிப்படுத்தியது. 


தொடர்ந்து ராமபத்ர ரா ரா பால் வடியும் முகம் (ஊத்துக்காடு) தாசரதே கருணா பயோனிதே, முத்துக்காரே யசோதா, கோபால கிருஷ்ண பாரதியின் 'அம்பலத்தாடும் அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ'இனிமை. அடுத்து முருகன் பேரில் இரண்டு பாடல்கள், அய்யப்பன் மீது நரஜன்மம் எடுத்தாலும் பயன் பெற சரணம் சொல்ல சொல்லி, நாமதேவ கீர்த்தன ஹரி ஹரி என அபங், அய்யப்பனை மணியான பாடலில் வர்ணித்து, பாண்டுரங்கனை 'பண்டரீச பூதமொடே 'பண்டரிநாதா பாண்டுரெங்கா 'என கொண்டாடி நடைபெறும் மார்கழியில் திருப்பாவையை 'தூமணி மாடத்து 'என பாடி மார்கழி செல்விக்கு பெருமை சேர்த்து வீரமாருதி வணக்கத்துடன் நிறைவு செய்தார்கள். 
வயலினில் உமா அருணும், மிருதங்கத்தில் சங்கர்ராமனும் வாசித்து சிறப்பித்தனர். கலைஞர்களை ஹயக்வாரீவா சார்பில் மீனா வெங்கியும், கோவில் சார்பில் விஸ்வநாதனும் கௌரவித்தார்கள். நிகழ்ச்சியை ஹயக்ரீவா சார்பில் மீனா வெங்கி கலைதொடர்பாளராக நடத்தி வைத்தார். 
- நமது செய்தியாளர் மீனா வெஙகி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்...

நிலவேம்பு கஷாயம் முகாம்

நிலவேம்பு கஷாயம் முகாம்...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us