செய்திகள்

ஆர்யாவின் பரத அரங்கேற்றம்

ஜனவரி 11,2018  IST

 டில்லி மோதி பாக் கர்நாடக சங் அரங்கில் ஆர்யா விமல் ரெய்னாவின் பரத அரங்கேற்றம் விமரிசையாக நடைபெற்றது. முக்கிய விருந்தினர்கள் பாரம்பரிய குத்துவிளக்கேற்றிட புஷ்பாஞ்சலியுடன் (நாகஸ்வராளி )நடனமாலை துவங்கியது. 
குரு ருசிகுப்தாவிடம் நான்கு வயது முதல் நடனம் கற்க ஆரம்பித்து எட்டு வருட கடின உழைப்பில் அரங்கேற்றம் காணும் ஆர்யா, குருவிற்கு பெருமை சேர்த்தார். படிப்பிலும் முதலிடம் வகிக்கும் ஆர்யா,  அரசு வழங்கும் கலைக்கான சி சி ஆர் டி இளநிலை உதவித்தொகை பெரும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 

வாசஸ்பதி க்ருதி (ரூபக தாளம்) லகுவாக ஆடிக்கொண்டு திருப்புகழ் பாடலை அலாரிப்புவில் (கல்யாணி/மிச்ரசாபு ) அழகுற அபிநயித்து கரகோஷம் பெற்றார். ஆரபி ஜதீஸ்வரத்தில் குருவின் திறமை மிகு நடனகோர்வை பாராட்டும்படி இருந்தது. அடுத்து ராகமாலிகா சப்தத்தில் (மிஸ்ர தாளம்) அடவுகளும், மேடையை பயன்படுத்திய பாங்கும் பாராட்டும்படி இருந்தது. மதுரை சுந்தரேஸ்வரர் மீனாட்சியை மையப்படுத்திய சகியே வர்ணம் (கமாஸ்) ஆர்யாவின் நடன அரகேற்றத்தின் முத்திரை பதித்த அம்சம். சகியிடம் தனது காதலனின் பெருமைகளை நளினம் மிளிர ,வெட்கம் ,தாபம் என பல உணர்வுகளை அடுத்தடுத்து காட்டி அசரவைத்தார். அன்னமய்யாவின் முத்துகாரே, ஹம்சானந்தியில் சங்கரகிரி, கன்னட தில்லானா என துள்ளலாக ஆடி அரங்கத்தை தனது கட்டுக்குள் வைத்து தன்னை ஒரு முழுமையான நடன மணியாக நிரூபித்துக்கொண்டார்.


பிரிகேடியர் விவேக் வெங்கடராமன் சிறப்புவிருந்தினராகவும், ரிஷி வஷிஷ்ட் (உதவி இயக்குனர் சிசிஆர்டி) ராகேஷ் குப்தா, டினா வச்சானி, மஞ்சரி சின்ஹா, ஷஷிப்ரபா, மீனா வெங்கி (விமர்சகர்) முக்கிய விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்
அன்றைய நடனமாலைக்கு நட்டுவாங்கம்- குரு கலாஸ்ரீ ருசிகுப்தா, பாட்டு- சுதா ரகுராமன், மிருதங்கம்- கும்பகோணம் பத்மநாபன், வயலின்- விஎஸ்கே. அண்ணாதுரை, புல்லாங்குழல்- ரகுராமன் வாசித்து சிறப்பித்தனர். நிகழ்வுகளை ஆர்.ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்...

நொய்டாவில் ஏகாதசி பஜனை

நொய்டாவில் ஏகாதசி பஜனை...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us