செய்திகள்

துவராகவில் ரமணா விஜயகுமாரின் பரத நிகழ்ச்சி

ஜனவரி 11,2018  IST

டில்லி துவாரகா ராம் மந்திர் மண்டல பூஜையின் அங்கமாக ரமணா விஜயகுமாரின் பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ரமணா, குரு கனகசுதாகரின் மாணவர். கணினி பொறியாளர் என்ற வரைகோட்டை தாண்டி கலை ஆர்வத்தை பரதத்தில் தொடர்வது பாராட்ட வேண்டியதொன்று.
ரமணாவின் அன்னை சித்ரா விஜயகுமார் பாபநாசம் சிவனின் வரிகளில் மூலாதார மூர்த்தி (ஹம்சத்வனி) பாடிட புஷ்பாஞ்சலியுடன் தொடங்கினார். தொடர்ந்து ராகமாலிகையில் முருக சப்தம். அதில் வள்ளியுடனான வேலனின் விளையாட்டினை அற்புதமாக அபிநயித்தார். அடுத்து தோடயமங்கலம் ராகமாலிகாவுடன் தாளமாலிகாவும் இணைந்து விறுவிறுப்பாக இருந்தது. கிருஷ்ணனின் லீலைகள் பார்க்க பார்க்க பரவசம் எப்பொழுதும் ஏற்படும். கீதோபதேசம் கிருஷ்ணனை கண் முன் நிறுத்தியது மீண்டும் பாபநாசம் சிவனின் இடது பதம் தூக்கி ஆடும் ரசிக்கவைத்தது.


சித்ரா விஜயகுமார் இடைநேரத்தில் அன்றைய திருப்பாவை திருவெம்பாவையாய் பாடியதோடு, பழனி சுப்ரமணிய பாகவதரின் ஆங்கில பாடல் பலத்த கரகோஷத்தை பெற்றது. அடுத்து ரமணாவின் ஜெகதாநந்த காரகா, சின்னச்சிறு கிளியே, தில்லானா நடனமாலைக்கு மெருகேற்றிட மங்கலத்துடன் நிறைவு செய்தார். நிகழ்வுகளை மீனா வெங்கி தொகுத்தளித்தார். கோவில் சார்பில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- நமது செய்தியளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்...

நொய்டாவில் ஏகாதசி பஜனை

நொய்டாவில் ஏகாதசி பஜனை...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us