செய்திகள்

கடல் கடந்து வந்த கர்நாடக இசை மாலை

ஜனவரி 12,2018  IST

டில்லி தமிழ் சங்கத்தில் அமெரிக்கா வாழ் டாக்டர் சஞ்சய் சுப்ரமணியத்தின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ துறையில் சிறந்த பெயருடன் அமெரிக்காவில் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து கொண்டு இசையில் தனது ஆர்வத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் சஞ்சய் சுப்பிரமணியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வருடாவருடம் கர்நாடக இசையின் முதல் நகராக விளங்கும் சென்னை மார்கழி உற்ஸவத்தில் பங்கேற்க வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் டில்லி நகர இசை பிரியர்களுக்கு அவரின் கச்சேரி கேட்கும்வாய்ப்பு கிட்டியது.
பாபநாசம் சிவனின் 'கருணை செய்வாய் என கஜ ராஜனை நல்ல தருணம் இதுதான் என்று ஹம்சத்வனியில் அழைத்துகொண்டு, மயிலை கபாலியை -உலகெல்லாம் தொழும் ஈசா -உனது நாமம்தனை உளம் மகிழ்ந்து உறைத்தேன் -அன்னையும் தந்தையுமான உன் அடிபணிந்தேன் என்று மலயமாருதத்தில்'கற்பக மனோகரா காத்தருள் 'என்று வேண்டிக்கொண்டு அடுத்து கமல மார்பனே/விமலா பாதனே /புவன மோகனா /பதித பாவன/கருட வாகன /பரமபுருஷா /நாராயணா என்று பலவாறு விளித்து 'துணை புரிந்தருள் கருணை மாதவா (வரமு)'தொடர்ந்து பாபநாசம் வரிகள் கேட்க கிடைத்தது அமிர்தம். மாதவனுக்கு பிறகு மருகன் .முருகா முருகா என்றால் உருகாதோ உள்ளம் ..வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வருவாய் அன்றோ என் கேள்வி பதிலாய் பெரியசாமி தூரன் வரிகள் நெஞ்சை தொட்டன.


கோபால கிருஷ்ண பாரதியின் என் நேரமும் உன் சந்நிதியிலே நான் இருக்க வேணுமய்யா (தேவகாந்தாரி), ஷ்யாமா சாஸ்திரியின் 'தருணம் இதம்மா என்னை ரக்ஷிக்க 'என சங்கரியிடம் கண் பார்த்து ரக்ஷிக்க வேண்டிக்கொண்டு, அடுத்தாற்போல் மத்யமாவதிக்கு ராக ஆலாபனை பந்தலிட்டு, சுப்ரமணியத்தின் வயலின் அழகுக்கு அழகூட்ட சரணம் சரணம் சொல்லி மால் மருகனை, இரவு பகல் பாராது பூஜித்து பாபநாசம் வரிகளில் 'சரவணபவ குகனே ஷண்முகனே தயாபரனே இழைத்து இழைத்து பாடியது அருமை.புரந்தர தாஸரின் நாராயண எனும் நாம ஸ்மாரணையை மார்கழி மாலையில் நம்மையும் ஜபிக்க வைத்து, சனி மாலையில் ஸ்ரீவாசா திருவேங்கடமுடையானை தரிசனம் செய்வித்து தலை நகர் இசை ராசிகளுக்கு இனிய தமிழ் மாலையை அழகாக தொடுத்து வழங்கினார்.
வயலினில் ஏ.ஜி.சுப்பிரமணியமும், மிருதங்கத்தில் கும்பகோணம் பத்மநாபனும் தம்புராவில் அவரது மாணவர் ஜனார்தன் சுப்பிரமணியமும் இணை சேர்ந்து இசைத்து மகிழ்வித்தனர். தமிழ் சங்க இணை செயலர் ரமாமணி சுந்தர் வரவேற்க, துணை தலைவர் பென்னேஸ்வரன் வாழ்த்துரை வழங்கி கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்...

நொய்டாவில் ஏகாதசி பஜனை

நொய்டாவில் ஏகாதசி பஜனை...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us