செய்திகள்

தலை நகரில் இருவேறு இசைகளின் சங்கமம்

ஜனவரி 12,2018  IST

இந்திய பன்னாட்டு கலை மையமும், சஹர் அமைப்பும் இணைந்து சுஃபி மற்றும் கர்நாடக இசை சேர்ந்த ஜுகல் பந்தி இசை நிகழ்ச்சியை லோதிரோடு இந்திய பன்னாட்டு மையத்தில் நடத்தியது. கர்நாடக சங்கீத கலைஞர் சுதா ரகுராமன், சுஃபி இசை கலைஞர் மிர் முக்தியார் அலி அவரவர் இசை குழுவினருடன் தனியாகவும் இணைந்தும் பாடி ஒரு புதிய இசை அனுபவத்தை தந்தனர்.
செஹர் அமைப்பு உலக சங்கீத விழாவை வருட வருடம் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. இந்த வருடம் உலக சங்கீத இசை கலைஞர்கள் பங்கேற்கும் விழா உதய்ப்பூரில் வருகிற பிப்ரவரி 9, 10, 11 தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த கச்சேரி ஏற்பாடு செய்ததாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.


நாத யோகத்தை ஓம்கார துவனியுடன் ஆரம்பித்து, பாபநாசம் சிவனின் 'சாமகான லோலனே' (ஹிந்தோளம் ) அரங்கை கயிறால் கட்டி போட்டது. அதன் சஞ்சாரத்தில் சாம கானத்தில் ஸ்வரத்தையும் அமைத்து கொண்டு நம்மை இசை சாரலில் மகிழ்வித்தார். முக்தியாரின் பாடலுக்கு பிறகு மன்லாகுயாரே என்று மோஹனத்தில் பஜன் .அடுத்து யமுனா கல்யாணியில் கிருஷ்ணா நீ பேகநே பாரோ விழாவிற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் விதமாக ஆவனியா பாரத தேஸ்க்கி அருமை. வனமாலி ராதா ரமணா விறு விறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இனிமையாகவும் இருந்தது.
சுதாவுக்கு மிருதங்கத்தில் சுரேஷ்பார்த்தசாரதி, கடம் ராஜாராமன், புல்லாங்குழல் ரகுராமன் இணைந்து இசை சேர்த்தனர்.  முக்தியாருடன் பக்ருதின்-ஹார்மோனியம், ராகேஷ்குமார்-தபலா, பப்புலு டோல் வாசித்து சிறப்பித்தனர். இறுதியில் கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்...

நிலவேம்பு கஷாயம் முகாம்

நிலவேம்பு கஷாயம் முகாம்...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us