செய்திகள்

தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் --ஆவணப்படம்

ஜனவரி 13,2018  IST

தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப தம்பிரான் பற்றி டில்லி தமிழ் சங்க இணை தலைவர் பென்னேஸ்வரன் தயாரித்த ஆவணப்படம் தில்லித் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கில் கடந்த சனி மாலை திரையிடப்பட்டது.
புரிசை கிராமத்தில்கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து கலைஞர் தனது வீட்டின் தாழ்வாரத்தில் இளம் கலைஞருக்கு பாட்டு பயிற்சி அளிப்பதுடன் ஆவணப்படம் நம்முன் விரிகிறது. எளிமையான மக்கள், வயல்வெளிகளில் வேலை செய்துவிட்டு தம்பிரானிடம் பயிற்சி பெற ஒன்று சேருகிறார்கள். திண்ணை, தெரு என்று அவர்கள் பயிற்சி பெறும் அரங்குகள் இயற்கை வெளிச்சத்தில், இயற்கையான சப்த பின்னணியில் நம்மை தமிழ் மண்ணுடன் இணைக்கின்றன.


முற்றிலும் ஆண்கள் பங்கேற்கும் நாட்டிய நாடகம் நமது ராமாயணம், பாரதம் என்ற காப்பியங்களை சுற்றிவருகிறது. ஆண்களே பெண் வேடம் என்று நடிப்பு, பேச்சு, பாட்டு என பலவும் ஏற்று வலம் வருகிறார்கள். ஹார்மோனியம், தப்பை என்று சில வாத்தியங்களை வைத்துக்கொண்டு ஒரு குழுவாக பாடி நாடகத்திற்கு விறுவிறுப்பையும் .ரசனையும் கூட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். காவிய பாத்திரங்களுக்கு கலைநயமிக்க தலை அலங்கார கிரீடங்கள், ஆடைகள், கத்தி, கேடயம் என உபகரணங்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியா கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்னதான் அறிவியல் முன்னேற்றம் பல படிகள் நம்மை முன்னே கொண்டு சென்றாலும், நமது மண்ணின் கலை வடிவம் என்றும் வாழ்த்து கொண்டுதான் இருக்கும். மிக எளிமையாக காவியங்களை மக்களிடம் கோவில் விழா காலங்களில் விடிய விடிய நடத்தி வரும் இந்த கலைஞர்களை அரசு பேணிடவேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரம், வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் .
இந்த கலையை வரும் காலத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் அதற்கு தனது வாழ்நாளை ஈடுபாட்டுடன் இணைத்துக்கொண்ட கலைமாமணி கண்ணப்ப தம்பிரானை அவரது தெருக்கூத்து கலையை படமாக்கி தமிழனின் கலை பெட்டகத்தில் சேர்த்த உயர் பணியை டில்லி யதார்த்தா பென்னேஸ்வரன் செய்துள்ளார். இணை இயக்குனராக சுரேஷ், புனே திரைப்பட கலைஞர் சசிகாந்த் காமெராவை கையாண்டுள்ளனர்.
இந்த ஆவண படம் 2003ல் சுவிட்ஸர்லாந்தில் ஐரோப்பா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் பல நகரங்களிலும், தொலைகாட்சியிலும் இந்த ஆவண படம் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கூத்து பட்டறை தலைவர் நா முத்துஸ்வாமியின் நேர்காணல் இந்த படத்திற்கு வலு சேர்க்கிறது .
தமிழன் பெருமை கொள்ளும் விதமாக எந்த தொழிரீதியான எதிர்பார்ப்பும் இன்றி கலை பற்றுடன் இந்த ஆவண படத்தை எழுத்து, இயக்கம், ஆக்கம்என பல்வேறு இடர்களை மீறிய படைப்பை ஒரு கலைஞனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். அவரின் உன்னத பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
பாரம்பரிய கதைகள் மட்டுமின்றி பாரதியின் பாஞ்சாலி சபதம், பெர்டோல்ட் ப்ரெக்டின் காகசியன் சாக் சர்கிள் என்ற ஜெர்மீனிய நாடகம், பெரிய சிறகுடைய வயோதிகன் என்ற கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய கதை ஆகியவற்றையும் கூத்து வடிவில் உருவாக்கியவர் கண்ணப்ப தம்பிரான்.

கண்ணப்ப தம்பிரான் 2003ம் ஆண்டில் மறைந்தார். அவர் பெயரில் அவருடைய மகன் புரிசை சம்பந்த தம்பிரான் புரிசையில் தெருக்கூத்து பயிற்சி பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்...

நிலவேம்பு கஷாயம் முகாம்

நிலவேம்பு கஷாயம் முகாம்...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us