செய்திகள்

டில்லி வக்கீல்கள் சங்கத்தில் மஹா சங்கராந்தி

பிப்ரவரி 11,2018  IST

டில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் கலாச்சார கழகம் பொங்கல் விழாவை வருடா வருடம்கொண்டாடி வருகிறது


இந்த வருடம் தமிழர் விழா இந்திய பன்னாட்டு நீதி மன்ற சொசைட்டி அரங்கில் நடைபெற்றது.அரங்கு மேடையின் இருபுறமும் வாழை கரும்புடன் தோரணங்கள் தமிழ் நாடு முறைப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாசலில் பூக்களாலான கோலத்தின் நடுவே விளக்கு அலங்காரம் காண்போரை கவர்ந்தது.செண்டை மேளம் முழங்க சிறப்பு விருந்தினர்கள் அரங்கிற்கு வரவேற்கப்பட்டனர்

சிறுவர் சிறுமியரின் இறைவணக்கப்பாடலுடன் விழா தொடங்கியது சம்ப்ரதாய குத்து விளக்கேற்றுதல் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.அனுஷா ராமச்சந்திரனின் பரத நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.பள்ளி குழந்தைகள் பாடிய தேசபத்தி பாடல்கள் ,ஆதித்யாவின் கீ போர்டில் வாசித்த ரோஜா படப்பாடல் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. வழக்கறிஞர் சேதுராமலிஙகம் தமிழர் கொண்டாடும் பொங்கல் விழாவின் பின்னணி பற்றி விரிவாக சொன்னார்கள்


வழக்குரைஞர்கள் சத்தியபால் சிங் ,எம் சி .டிங்கிரா ,விபின் நாயர் ,பி.பி சுரேஷ்,சந்தீப் மஹாபத்ரா ,விக்ராந்த் யாதவ் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்தனர் .


இந்த அமைப்பின் செயலர் வழக்கறிஞர் ஜெயபாஸ்கர் ரவி


விழாவை ஏற்பாடுசெய்து நிகழ்ச்சிகளை நடத்தினார் .


இறுதியில் கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் -பூக்கொத்துக்களை சிறப்பு விருத்தினர்கள் வழங்கினர்.


வந்திருந்த அனைவர்க்கும் தமிழா நாட்டு விருந்துடன்,தாம்பூல பை வழங்கப்பட்டது
- நமது செய்தியாளர் மீனா வெங்கி





Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்...

மும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்

மும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்...

தாராவியில் சமையல் எரிவாயு விழிப்புணர்வு

தாராவியில் சமையல் எரிவாயு விழிப்புணர்வு...

கோலிவாடா பகுதியில் நிலவேம்பு கஷாயம்

கோலிவாடா பகுதியில் நிலவேம்பு கஷாயம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us