செய்திகள்

டில்லி ஸ்ரீ நிவிஷத் நடன பள்ளியின் பரத நிகழ்ச்சி

பிப்ரவரி 13,2018  IST

டில்லி மோதி பாக் கர்நாடகா சங்கத்தில் ஸ்ரீ நிவிஷத் நடன பள்ளியின் பரத நிகழ்ச்சி 'நவரச மார்க்கம்'நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நடனப்பள்ளியின் நிறுவனரும் ஆசிரியருமான இந்திரா முருகேசன்,தனது பள்ளி மாணவிகளுடன் மிக சிறப்பாக இந்த நடன நிகழ்ச்சியை ஒன்பது நடன கோர்வைகளுடன் அளித்தார்கள்.
சம்பிரதாய விளக்கு ஏற்றும் நிகழ்விற்கு பிறகு புஷ்பாஞ்சலியுடன் நடன மாலை தொடங்கியது. இதை மலர் வணக்கம் என்றும் சொல்கிறார்கள். நாட்டை ராகத்தில் ஆதி தாளத்தில் விக்னம் தீர்க்கும் விநாயகரை வணங்கி நடன மாலை இனிதாக நடை பெற வேண்டிக்கொண்டு நிகழ்ச்சி தொடங்கியது. புஷ்பாஞ்சலியில் தொடங்கி அடுத்து ,அந்த ஆடல் அரசனுக்கு வணக்கம் தெரிவித்து கொண்டு ,கீதா உபதேசத்தில் கண்ணனின் உயர்வை நளினமாய் சொல்லி, மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களை ரக்ஷித்த துர்கையில் கோபத்தைக்காட்டி, தேவகி நந்தனாவில் காதல் விரசம் காட்டி ,சீதா ஸ்வயம்வர் ,கிருஷ்ணா நீ பேகனே பாரோ -எத்தனை முறை க்ரிஷ்ணனை பார்த்தாலும் பிடிக்கும் .குரு இந்திராவின் நடனத்தில் யசோதாவின் அன்பு பாசம் பெருகி ஓடியது.போ சம்போ என்ன ஒரு அதிர்வு சிவனை உணர வைத்தார்கள்.


காளிங்க நர்தனத்தில் அந்த காளியனை பாலகிருஷ்ணன் அடக்குவதை காண்பது உன்னத அனுபவம்.மாணவிகள் அருமையாக அதை அபிநயித்தார்கள். மாணவிகள் தியா ,தனிஷா ,நேத்ரா ,சனா ,ஷ்ரேயா ஸ்ரீ சேவிதா ,ஈஷா ,ஸ்னேகா ,பிரியதர்ஷினி , ஷைலா , கிறிஸ்ட்டி மனுஷா ,திஷா ,மீனாட்சி, பிரசன்தா ,ஜான்வி ,த்ருவிகா,விருந்தா ,அதிதி,ஐஷான்யா ,த்விஷா,ஆர்யா,மேகா .மான்சி,,இஷிதா ,ஸ்நிக்தா ,ஜ்யோத்சனா , ஆகியோருடன் குரு இந்திரா முருகேசனும் இணைந்து நவரச அனுபவங்களை நடனம் மூலம் அனுபவிக்க செய்தார்கள்.
நிகழ்ச்சிக்கு தாரா ரங்கன் முதன்மை விருந்தினராகவும் மீனா வெங்கி, புல்லாங்குழலிசை வித்தகர் சேத்தன் ஜோஷி ,மைதிலி அட்டவர் (செயலர் -சுனைனா)சிறப்பு விருந்தினராகவும் வந்திருந்தனர். இறுதியில் கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விருந்தினர்களை நிறுவனர் இன்ற முருகேசன் கௌரவித்தார்கள்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

நொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்

நொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்...

நொய்டாவில் கிருத்திகை பஜனை

நொய்டாவில் கிருத்திகை பஜனை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us