செய்திகள்

தமிழர் நல கழகம் கொண்டாடிய பொங்கல் விழா

பிப்ரவரி 15,2018  IST

டில்லி மயூர் விஹார் பகுதி 3ல் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இப்பகுதி சமுதாய கூடத்தில்.சிறப்பாக கொண்டாடப்பட்டது.தாய் திருநாடாம் தமிழ் மண்ணை விட்டு தலை நகரில் தடம் பதித்த நம்மக்கள் இந்த பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். தமிழர் நல கழகம் அவர்களுக்குள் பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறது .பொங்கல் விழா அன்று இப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவதால் மிக ஆர்வமுடன் இந்த நாளை எதிர்பார்த்து கொண்டாடுகிறார்கள்.
கடந்த பல வருடங்களாக வார இறுதி நாட்களில் தமிழ் பாட வகுப்புகள் இந்த கழகம் மூலம் இலவசமாக நடத்துகிறார்கள் .ஆங்கிலமும் ,ஹிந்தியும் கற்கும் அவர்களுக்கு தாய் மொழி பற்றை ஏற்படுத்தி,ஊக்குவித்து ,அதோடு இலவசமாக எழுத படிக்க சொல்லித்தருகிறார்கள்.சுப்பையா ,பவானி,சுமதி ஆகியோரின் தன்னலமற்ற சேவை மிகுந்த பாராட்டுதல்களுக்குரியது.தமிழ் நாடு அரசு நடத்தும் இதற்கான பரிட்ச்சைளையும் எழுதி தெரிகிறார்கள் என்பது சிறப்பு .இந்த தமிழ் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழி சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்வதோடு ,தமிழ் குறு நாடகங்களும் தயாரித்து நடிக்கிறார்கள் .



பொங்கல் விழா கணேச பூஜை,சூர்யா நாராயண பூஜையுடன் தொடங்கியது வெண்ணப்பொங்கல் சர்க்கரைப்பொங்கல் பெண்கள் தயாரிக்க சூரியனுக்கு படைக்கப்படுகிறது விளையாட்டு திடலில் நடக்கும் பலவிதமான விளையாட்டு போட்டிகளில் குழைந்தைகளும் இளைஞர்களும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள்.


விழா நடைபெறும் அரங்கின் ஒருபகுதியில் பெண்கள் வண்ணக்கோலம் இட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் .அடுத்தாற்போல் அரங்கில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி,தமிழ் கட்டுரை போட்டி,ஓவிய போட்டி ,பொதுஅறிவுத்திறன் போட்டி,என பலதர வயதுபிரிவினரும்


பங்கேற்க போட்டிகள் தொடர்கின்றன .மங்கைய ருக்கான சொல் விளையாடல் ,நாற்காலி ஓட்டம் சுவாரசியமாக நடைபெற்றது.போட்டிகள் முடிந்து மத்திய உணவிற்கு பிறகு மாலையில் கலை நிகழ்ச்சிகள்,பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்வருடம் டில்லி தமிழ் நாடு இல்லத்தின் முதன்மை ரெசிடெண்ட் தலைமையர் முருகானந்தம் ,வழக்குரைஞர் எஸ்.நந்தகுமார்,டில்லி தமிழ் சங்க செயலர் முகுந்தன் மற்றும் தமிழ் நாடு தொலை தூர தமிழ் படிப்பின் பிரதிநிதி விஜயலக்ஷ்மி .சமூக ஆர்வலர் மீனா வெங்கி இப்பகுதி கவுன்சிலர் கலந்துகொண்டு மக்களை வாழ்த்தி ,வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவித்தார்கள்
- நமது செய்தியாளர்  மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

நொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்

நொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்...

நொய்டாவில் கிருத்திகை பஜனை

நொய்டாவில் கிருத்திகை பஜனை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us