செய்திகள்

தலைநகரில் சிவராத்திரி கொண்டாட்டம்

பிப்ரவரி 22,2018  IST

 கிழக்கு டில்லி வசுந்தரா பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குழுக்களாக இணைந்து சிவாஷ்டகம் மற்றும் சிவ ஸ்லோகங்கள் உள்ளிட்டவைகளை பாராயணம் செய்தனர். மாலையில் பிரதோஷ சிவ ருத்ராபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பிரதமகால சிவ ருத்ராபிஷேகம், துவிதிய கால சிவ ருத்ராபிஷேகம், திரிதிய கால சிவ ருத்ராபிஷேகம், சதுர்த்த கால சிவ ருத்ராபிஷேகம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது.





சிறப்பு அபிஷேகங்களைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்ட பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். துவக்கம் முதல் அனைத்து சேவைகளின் போதும் பக்தர்கள் அனைவரும் 'சிவாய நமஹ' என சிவமந்திரத்தை பாராயணம் செய்தது, ஆலய வளாகத்தை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.




- டில்லியிலிருந்து வெங்கடேஷ்  


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

நொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்

நொய்டாவில் லக்ஷ்மி நரசிம்ம உற்சவம்...

நொய்டாவில் கிருத்திகை பஜனை

நொய்டாவில் கிருத்திகை பஜனை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us