செய்திகள்

டில்லியில் உலக அமைதிக்காக பிரார்த்தனை

மார்ச் 01,2018  IST

 புதுடில்லி : கிழக்கு டில்லியில் வசுந்தரா சர்வேஸ்வர சமாஜ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலையத்தின் 19 வது ஆண்டு விழா, பிப்ரவரி 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று மாலை, பெருந்திரளமான பக்தர்கள் கூடி உலக அமைதிக்காக ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாமாவளி அச்சனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.




சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த தென்னிந்தியர்கள் பலரும் ஒன்றுகூடி, வாரந்தோறும் ஒவ்வொருவரின் இல்லத்தில் இணைந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, வழிபாடு நடத்தி வந்தனர். பின்னர் கோயில் ஒன்றை ஏற்படுத்த விரும்பி அவர்கள், நிதி திரட்டி, டில்லி வளர்ச்சி கழகத்தை அணுகினர். கோயில் அமைக்க மனுவும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2003 ம் ஆண்டு வசுந்தரா பகுதியில் கோயில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.







2005 ம் ஆண்டு ஆலயம் அமைக்க பாலாலயம் செய்யப்பட்டு, 2010 ம் ஆண்டு கோயில் கட்டி முடிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அப்போதைய டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கடஹர கணபதி, கணபதியின் 32 ரூபங்களில் ஒன்றாகும். வடஇந்தியாவில் உயரமான மற்றும் எடை அதிகம் கொண்டதாகவும், கிரானைட் கல்லால் ஆன இந்த விநாயகர் விக்ரஹம் பார்க்கப்படுகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன், 32 சிவாச்சாரியார்களைக் கொண்டு, ஆகம சாஸ்திரங்களின்படி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.






இக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும், 400க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மாதத்தின் 2வது ஞாயிற்றுகிழமைகளில் சமஸ்தி நவகிரக ஹோமங்களும், வாரந்தோறும் ஸ்ரீ விஷ்ணு சகரஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீ அனுமன் பாராயணங்கள், ஸ்ரீ நாராயணனீயம் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ ஆராதனை, நவராத்தி கொலு, மண்டல பூஜை, விளக்கு பூஜை, மார்கழி மாத பூஜை உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகிறது. 




- டில்லியிலிருந்து வெங்கடேஷ்  


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us