செய்திகள்

நவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா

மார்ச் 31,2018  IST

  நவி மும்பை தமிழ்ச் சங்கத்தில் உலக மகளிர் தினம் சிறப்பாக்க கொண்டாடப்பட்டது  இதனையொட்டி காலையில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் போர்டிஸ் ஹீரானந்தானி பங்கேற்றனர். பலவிதமான டெஸ்டுகளும் ,அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மக்கள் பெருமளவில்  பயன்பெற்றனர் .


உணவுத்திருவிழா என்ற தலைப்பில் பெண்கள் பல வித  உணவுகளை தங்கள்  வீட்டில் தயாரித்து அரங்கில் விநியோகித்தார்கள். மாலையில் கலை விழா  நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர்கள் மட்டுமின்றி பிற மாநில பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 







பரதம்,இசை,கும்மி,கோலாட்டம்,பேச்சு என பலவகைகளில்  திறமைகளை மேடையில் காண்பித்தார்கள். மகளிர் தினத்திற்கென்று தயாரித்து பாடிய பாடல் அனைவரையும் தாளமிட வைத்தது.மூத்த குடிமக்கள்  கையில் தீபம் ஏந்தி ஆடிய நடனம் பாராட்டுதல்களுக்கு  உரியது. கல்லூரி மாணவிகளின் விறு விறுப்பான நடனம் ரசிக்க வைத்தது.ஜனரஞ்சகமாக விளையாட்டு போட்டிகளில் வந்திருந்தவர்கள் பங்கேற்று மகிழ்ந்தார்கள். இந்த கலை மாலைக்கு இந்தியா காப்பீட்டு நிறுவன உயர் அதிகாரி சந்தியா மூர்த்தி தலைமை தாங்கினார்.விழாவின் முக்கிய அம்சமாக பெண் சாதனையாளர்கள் - ஜெய காமாக்ஷி  மற்றும்  அனிதா  டேவிட் இருவருக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். நிகழ்வுகளை ராஜஸ்ரீ நாகராஜன் மிக அழகாக தொகுத்து வழங்கினார்கள்.






- டில்லி மீனா வெங்கி 


Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்...

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா...

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்.

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்....

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us