செய்திகள்

தலைநகரில் பங்குனி உத்திர விழா

மார்ச் 31,2018  IST

புதுடில்லி : டில்லியின் வசுந்தரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயத்தில் பங்குனி உத்திர விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு பண்டிதர்களின் வேதமந்திரங்கள் முழங்க, முதல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பக்தர்கள் காலை முதலே 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என முழங்கியபடி பால்குடம் ஏந்தி வந்தனர். பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த பால், மஞ்சள்,அரிசி மாவு, திருமஞ்சன தூள், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு வெள்ளி கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் டில்லி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒன்று கூடி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். தீபாராதனை, பிரசாத விநியோகத்துடன் விழா நிறைவடைந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவக்கும் பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- டில்லியிலிருந்து வெங்கடேஷ் 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us