செய்திகள்

டில்லியில் தியாகராஜர் ஜெயந்தி

மே 12,2018  IST

 புதுடில்லி : தியாகராஜரின் 251வது பிறந்த தினத்தை டில்லி வாழ் இசைஉலகம் மிக விமர்சியாக ராமகிருஷ்ணாபுரம் வெங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் கொண்டாடினார்கள்.சென்ற வருடம் தொடங்கி இந்த ஜெயந்தி விழா டில்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது.அனைத்து இசை அமைப்புகளும் இதில் பங்கேற்பது சிறப்பு  அம்சம்.இசை குருமார்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் பெருமளவில் டில்லி ,புறநகர் டில்லி பகுதிகளில் இருந்து வந்து குரு அஞ்சலியில் கலந்து கொண்டார்கள்.டாக்டர் மணிகண்டன்,டாக்டர் பிரசாந்த் பை, சதீஷ், ஆதர்ஷ், எம்.ஆர்.ராமஸ்வாமி ,லலிதா ஆனந்த்,ஸ்வர்ணலதா சுப்பிரமணியம்,டாக்டர் தீப்தி பல்லா, பத்மஸ்ரீ லீலா ஒம்செரி,டாக்டர் சுஷீலா,லக்ஷ்மி சேஷாத்ரி,விஜயஸ்ரீ மற்றும் பல பாடகர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினார்கள்.டில்லி வயலின் கலைஞர்கள், எ.ஜி.சுப்பிரமணியம், ராதிகா, ஸ்ரீதரின் மாணவர்கள்- வீணாவில்,ஷ்யாமளா பாஸ்கர்-புல்லாங்குழலில் ரெங்கன்-மிருதங்கத்தில் தாளமணி வெற்றி பூபதி,மனோகர்,சாம்பவி,கடத்தில் மன்னை. என்.கண்ணன், வருண் இணைந்து வாசிக்க - திருவையாறே டில்லியில் வந்தது போல் அரங்கம்  காட்சி தந்து.

முன்னதாக உற்சவர் பிரகார ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்டு நடுநாயகமாய் அமர்ந்திருந்தார். தியாகராஜரின் படத்திற்கு அனைத்து அமைப்பின் சார்பில் பிரதிநிதிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஒருசேர பாடி இசை குருவிற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.கோவில் சார்பில் இசை கலைஞர்கள் கௌரவிக்கபட்டார்கள். இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினரும் வயலின் வித்தகர் டில்லி ஆர்.ஸ்ரீதரும் மிக நேர்த்தியாக செய்திருந்தார்கள்.   
- செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் கிருத்திகை பஜனை

நொய்டாவில் கிருத்திகை பஜனை...

நொய்டாவில் 'உலக அமைதிக்காக ஜபம்'

நொய்டாவில் 'உலக அமைதிக்காக ஜபம்'...

அகமதாபாத்தில் சித்திரை திருவிழா

அகமதாபாத்தில் சித்திரை திருவிழா...

நவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா

நவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us