செய்திகள்

டில்லி வீணாலயா அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சி

மே 24,2018  IST

 டில்லி லோதி ரோடு லோக் கலா மஞ்ச் வாசுகி அரங்கில் வீணாலயா அமைப்பின் பொன் விழா நிகழ்ச்சி கோலாகலமாய் நடைபெற்றது.கே.ஆர்.ஜே சங்கீத பள்ளி மாணவிகள் இறைவணக்கம் பாடிட மங்கள குத்துவிளக்கேற்றிட விழா துவங்கியது.

வீணை விதூஷி பிரேமா மல்லிகார்ஜுனன் அவர்களால் டில்லி லக்ஷ்மிபாய் நகரில் 1968ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீணாலயா சங்கீத ஸ்தாபனம் ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகி ,இங்கு பயின்று கலைஞர்களாய் வலம் வரும் சிஷ்யர்களுடன் கூடி கொண்டாடிய வைபவம் காணவேண்டிய ஒன்று.

இந்த பொன்விழா வைபவத்தில் வாத்திய கலைஞர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டார்கள் .மூத்தவீணை கலைஞர் பெங்களுரு பாக்யலக்ஷ்மி சந்திரசேகர் (வீணா கானவர்த்தினி)கும்பகோணம் பத்மநாபன் (மிருதங்க வாத்ய தத்வஜனா) ஸ்ரீகுமரன் தம்பி (வீணா சங்கீத சேவா ரத்னா) டெல்லி ஆர் .ஸ்ரீதர்( தந்திரி வாத்ய நிபுணா)
ரெங்கராஜன் (மிருதங்க வாத்ய நிபுணா )ஹரி நாராயணன் மற்றும் மன்னை என்.கண்ணன் (கடம் வாத்ய நிபுணா )அஜய் குமார்(தபலா வாத்ய நிபுணா) மும்பை சுவாமிநாதன் (இசை சுடர்)விருதுகளால் பாராட்டப்பட்டனர் கலைஞர்களை சிறப்பு விருந்தினர் பத்மபூஷன் .டாக்டர்.ஆத்ரேயா அவர்கள் கௌரவித்து இந்திய கலைகள் நம் கலாச்சாரத்தின் ஆணிவேர் ,வரும் சந்ததியினர் இதை வளர்க்கவேண்டும் என்று வாழ்த்தி பேசினார்கள்.


அடுத்து வீணாலயா நிறுவனர் பிரேமா மல்லிகார்ஜுனன்-மும்பை சுவாமிநாதன் இணைந்து ஜுகல்பந்தி நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு இசை விருந்தளித்தனர்.டாக்டர் நிர்மலா பாஸ்கர் ஆண்டவன் பிச்சையின் வாழ்க்கை பின்னனி அவரது படைப்புகளை பற்றி இசையுடன் விளக்கம் தந்தார்.வீணாலயாவின் கலைஞர்கள்கலா ஸ்ரீனிவாசமூர்த்தி ,மைத்ரெயி கார்த்திக்,சுப்ரபா தனஞ்ஜெயன், ராஜலக்ஷ்மி ராகவன் அடுத்தடுத்து வீணை இசை வாசித்தார்கள்.

சுவாமிநாதனின் கர்னாட இசை கிடாரில் இனிமை தந்தது,பாக்ய லஷ்மியின் வீணா இசையும் விழாவிற்கு பெருமை சேர்த்தது.

இந்த விழாவில் வயலினில் ஸ்ரீதர் ,ரகவேந்த்ரப்ரசாத் ,மிருதங்கத்தில் கும்பகோணம் பத்மநாபன் ,ரெங்கராஜன் ,ஆதித்ய நாராயணன் கடத்தில் மண்ணை என் கண்ணன்,ஹரி நாராயணன் , தபலாவில் அஜய் குமாரும் வாசித்து சிறப்பு செய்தார்கள்.


நிகழ்வுகளை மீனா வெங்கியும்,பிரீதாவும் தொகுத்து வழங்கினார்கள்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


 

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us